திருச்சி பாலக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகத்தில்  மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொது செயலாளர்கள் இலியாஸ் தும்பே, அப்துல் மஜீத் பைஸி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.


மேலும் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் அஹமது நவ நிஜாம் முஹைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபூபக்கர் சித்தீக், ஏ.கே.கரீம், ராஜா உசேன நஜ்மா பேகம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


மேலும், எஸ்டிபிஐ கட்சியின் தேசியம் முதல் மாநிலம், மாவட்டம், தொகுதி, நகர மற்றும் கிளை வரையிலான அடுத் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல் ஜனநாயக அடிப்படையில் விரைவி நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பான ஆலோசனையும் நடைபெற்றது.




கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரம்:


கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கு மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளனர். இன்னும் ஏராளமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கத் தவறியது அரசின் நிர்வாகத் தோல்வியையும் காவல்துறையின் செயல்படாத நிலையையும், கள்ளச்சாராய கும்பலுக்கு ஆதரவான காவல்துறையில் உள்ளவர்களின் போக்கையுமே காட்டுகிறது.


ஏனெனில், காவல் நிலையத்திற்கு பின்புறமாக, கலெக்டர் அலுவலகத்திற்கு ஒன்றரை கீ.மீ தூரத்தில் தான், நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனைய உயிரிழப்புகளும் நடந்துள்ளன. இதுவே அந்த குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக உள்ளன. பிடிபட்ட கள்ளச்சாராய வியாபாரி பலமுறை இதே குற்றத்திற்காக சிறை சென்றுள்ளார். தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டு வந்தவன காவல்துறை கண்காணிக்கத் தவறியுள்ளது.


நேரில் வராத முதலமைச்சர்:


காவல்துறை துணை போயுள்ளது என நாங்கள் குற்றம்சாட்டுகிறோம் சுமார் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த போதும் தமிழக முதல்வர் ஒருமுறை பாடுக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்களில்லை. மட்டுமின்றி சட்டமன்றத்திலும், விவாதிக்கவில்லை தமிழக அரசின இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.


கள்ளச்சாராய விற்பனை கள்ளக்குறிச்சியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் சிஸ்டமேட்டிக்காக நடந்து வருவதா குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. அதிகார வர்க்கத்தினரின் துணையின்றி இது சாத்தியமில்லை.


மேலும், ஆண் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த மரண நிகழ்வை எச்சரிக்கையா உணர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததன் விளைவு தான் இன்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரன நிகழ்வுக்கு முக்கிய காரணம்.


கள்ளசாராயத்தை தடுக்க காவல்துறையில் தனியாக மதுவிலக்கு சிறப்பு பிரிவும், அதற்குரிய அதிகாரிகளு காவலர்களும் இருந்த போதும், தொடரும் கள்ளச்சாராய விற்பனையானது அந்த பிரிவின் செயல்பாட கேள்விக்குட்படுத்துகிறது. ஆகவே கள்ளச்சாராய மரணத்தை அரசு சாதாரணமாக கடந்து சென்று விடாம தொடர்புடைய அனைவரின் மீதும், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




தமிழ்நாட்டில் பூர்ண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் - நெல்லை முபாரக் 


இந்திய விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந் முன்வைக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு குறித்தும், சமூகத்தை மேம்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்று பொருளாதார நிலை குறித்தும் அறிய சாதிவாரி கணக்கெடுப்பு முறையே ஆதாரமாகும் என்பதால், எஸ்படி பிர் கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.


தமிழ்நாட்டில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல் மாஞ்சோலை மக்களுக்கு மாநில அரசு துணை நிற்கவேண்டும். .


குறிப்பாக தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் கள்ளக்குறிச்சி போன்று மரணம் நடக்காமல் இருக்க , உடனடியாக பூர்ண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.