திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள அமராவதி அணை அமைந்துள்ளது இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. பாசன வசதிக்காக அணையில் இருந்து 2,262 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணையின் தண்ணீர் திறந்து விடப்பட்டு தோடு, கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தற்போது அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிகளவு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம், செட்டிபாளையம் அருகே உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த அணையில் இருந்து கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது செட்டிபாளையம் தடுப்பணையில் வழியாக அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தடுப்பணையில் இருந்து 2,262 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிளை வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்று கொண்டிருக்கிறது தடுப்பணைகள் தண்ணீர் வரத்து அதிகளவில் இருக்கும் காரணமாக அந்த பகுதி முழுவதும் அழகாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் மிதமான அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் குடியிருப்புகளில் புழுக்கமான சூழலை உணர்ந்தனர். இந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை கரூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கிருஷ்ணராயபுரம், வெள்ளியணை, உப்பிடமங்கலம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பெய்து வருகிறது.
சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் பலத்த கன மழையும் பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வழக்கத்தைவிட கொட்டி தீர்த்த கன மழை மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளர். கரூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 587.60 மில்லி மீட்டராக மழையின் அளவு பதிவாகி உள்ளது.
அதில் குறிப்பாக கரூரில் 51.5 மில்லி மீட்டர் ஆகவும், அரவக்குறிச்சியில் 11.0 மில்லி மீட்டர் ஆகவும், அணை பாளையத்தில் 16.0 மில்லி மீட்டர் ஆகவும், கே.பரமத்தியில் 20.8 ஜீரோ மில்லி மீட்டர் ஆகவும், குளித்தலையில் 70.00 மில்லி மீட்டர் ஆகவும், தோகை மழையில் 70.0 மில்லி மீட்டர் ஆகவும், கேஆர் புரத்தில் 70.0 மில்லி மீட்டர் ஆகவும், மாயனூர் பகுதியில் 54.0 மில்லி மீட்டர் ஆகவும், பஞ்சப்பட்டி 72.0 மில்லி மீட்டர் ஆகவும், கடவூர் பகுதியில் 29.4 மில்லி மீட்டர் ஆகவும், பாலவிடுதி 57.4 மில்லி மீட்டர் ஆகவும், மைலம்பட்டியில் 66.0 மில்லி மீட்டராக மாவட்டத்தில் மழை அளவு பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.