தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கபட்டு வருகிறார்கள். குறிப்பாக  கொரோனா இரண்டாவது அலையில் தொடக்கத்தில் இருந்தே பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இவற்றை கட்டுபடுத்தும் முயற்சியில் மாநில அரசு முழு ஊரடங்கை  பிறப்பித்தது. பின்பு தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரபடுத்தியது. இதனால் தொற்றின் எண்ணிக்கை சற்று குறைந்தது, ஆனால் மீண்டும் சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா 3ஆவது அலையில் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கபடுவார்கள் என உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது. ஆனால் தற்போது மிஸ்சி (Misc) என்ற நோயால்  தமிழகத்தில் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கபட்டு வருகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 



மிஸ்சி நோய் என்றால் என்ன? 


கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்ட பிந்தைய காலத்தில், சாதாரணமாக குழந்தைகளின் உடலில் இருக்கும் எதிர்ப்பு திறன் அதற்கு மாறாக அபரீதத்துடன் அதிக அளவில் செயல்படுவதையே மிஸ்சி நோய் என , குழந்தைகள் மருத்துவத்தில் கண்டறியப்பட்டு உள்ளது. (Multisystem inflammatory syndrome in children (MIS-C)


கொரோனா பாதிப்பு காலத்தில் தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் இந்த மிஸ்சி (Misc) நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பெற்று வருகிறார்கள்.  இந்நிலை குறித்து பேசும்குழந்தைகள் நல மருத்துவர் பத்மபிரியா.


தமிழகத்தில் குறைந்த அளவிலேயே, குழந்தைகளை பாதித்துள்ளது மிஸ்சி நோய். ஆனால் பெற்றோர்கள் கவன குறைவாக இருந்தால் பெரிய அளவில் மிஸ்சி நோய் பாதிப்பு ஏற்படுத்தும் என்கிறார்,


மிஸ்சி நோய் அறிகுறிகள் 


கொரோனா பாதித்த பிந்தைய காலத்தில், குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, வாந்தி, அதிக அளவிளான இருதய துடிப்பு, கண் சிவந்து காணப்படுதல், உதடு மற்றும் நாக்கு தடிப்பாக  இருத்தல் போன்ற அறிகுறிகள் இருப்பதையே இந்த மிஸ்சி நோய்க்கான ஆரம்ப கட்டம் என குழந்தைகள் நல மருத்துவர் பத்மபிரியா கூறுகிறார்.



இதுபோன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் இருக்கும் பட்சத்தில், உடனடியாக 18 வயதுக்கு உட்பட்டவர்களை குழந்தைகள் நல மருத்துவரிடம் நேரிடையாக அழைத்து வந்து உரிய ஆலோசனை பெற்று வந்தால், நோயின் பாதிப்பு தம்மையை கண்டறிய குழந்தைகளின் புறம் காலில் உள்ள நரம்புகளின் நாடி துடிப்பு சீராக உள்ளதா, அல்லது குறைய தொடங்கி வருகிறதா என்பதை கொண்டு, குழந்தைகளின் பலவீனத்தை அறிய முடியும்.


இது தவிர, அபரீதமாக உடலில் செயல்படும் எதிர்ப்பு தன்மைக்கு ஏற்ப எதிர்ப்பு திறன் பரிசோதனை செய்து, திசு, நுரையீரல், இருதயத்துக்கு செல்லும் இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு ஆகிய பரிசோதனையை மேற்க்கொண்டால் இந்த மிஸ்சி நோய்  இருந்து குழந்தைகளை எளிதில் காப்பாற்ற முடியும் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள்.



 குழந்தைகளை அச்சுறுத்திவரும் அறிய வகை மிஸ்சி நோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியபட்டாலும், வரும் முன் காப்போம் என்பதற்கு ஏற்ப, குழந்தை செல்வங்களை காப்பதில் பெற்றோர்கள் முழுகவனம் செலுத்த வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.மேலும் மிஸ்சி நோய் அறிகுறிகளை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. தவறினால் உயிர் இழப்பு  ஏற்படவாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.