திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகரை பொறுத்தமட்டில் அதிகமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஆகையால் மாநகராட்சியில் மொத்த எண்ணிக்கையில் மேலும் ஒரு கட்டுப்பாட்டு மண்டலங்கள் சேர்க்கப்பட்டு 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த  கட்டுப்பாட்டு மண்டலங்களில் சுமார் 800 குடியிருப்பாளர்கள் இருக்கிறார்கள். அதிகமாக பாதிக்கபட்ட இடங்களில் இருக்கும் மக்கள் தேவையற்ற காரணங்களை கூறிக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் ரேண்டம் முறையில்  மாதிரிகள் எடுக்கும் செயல்முறை அமல்படுத்தபட்டுள்ளது. இதனை தொடர்ந்து   காந்தி சந்தையில் வணிகர்களிடம் இருந்து 82 மாதிரிகளை சேகரிக்கும் நடமாடும் பரிசோதனை மையம் சுகாதாரக் குழுவுடன் தொடங்கியது.புதிய ஆண்டு தொடக்கத்தில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலம் தான் இருந்தது. ஆனால் தற்போது பொன்மலை மண்டலத்தில் மூன்று கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளனது .




இதனை தொடர்ந்து கோ.அபிஷேகபுரம் 4  கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளது. குறிப்பாக  வார்டு எண் 52 மற்றும் 53-ன் கீழ் வரும் வயலூர் சாலை வட்டாரங்களில்,  உட்பட பகுதிகளில்  அதிகளவில் தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை  பதிவாகி உள்ளது. திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை ஒரே தெரு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வெவ்வேறு வீடுகளில் அதிகமாக பாதிக்கபட்டவர்கள்  இருந்தால், அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 அலைகளைபோல் இல்லாமல் இந்த 3 வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. ஆகையால்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல கூடாது எனவும், வெளி ஆட்கள் யாரும் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் மக்கள் அறிவுறுத்தும் பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.




மேலும் தொற்றால் பாதிக்கபட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் வெளியே செல்வதைக் கண்டால் தெரிவிக்குமாறு அருகில் உள்ள  வீட்டாருக்கு சுகாதார துறை சார்பில்  தெரிவித்துள்ளது. நகரத்தில் சுமார் 800 வீடுகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளன.  மேலும் பல பாசிட்டிவ் வழக்குகள் உள்ள வீடுகளில் இருந்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு, எரிப்பதற்காக தனித்தனியாக சேமிக்கப்பட்டது. குறிப்பாக பாசிட்டிவ் வழக்குகள் உள்ள வீடுகளில் இருந்து கழிவுகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு தனி டிரம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள  வீட்டுகளில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை பற்றிய தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தொற்று அதிகரித்து வருவதால் காந்தி மார்க்கெட், மீன் மார்க்கெட், முக்கிய வணிக  சாலை போன்ற அனைத்து பகுதிகளிலும் அரசு விதிமுறையை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.