திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய குறுக்கு சாலைகள், அதிக போக்குவரத்து நிறைந்தவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலான தார் சாலைகள், சிமென்ட் சாலைகள், அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும் ஆங்காங்கே பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளும், மழைக்காலம் சிதிலமடைந்து கிடைக்கிறது. மேலும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சில சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டாலும் பெரும்பாலான சாலைகளில் ஒட்டுப்போடும் பணிகள் நடந்தன. குறிப்பாக தில்லை நகர், தென்னூர், அண்ணாநகர் சாலைகள், மட்டும் புதிதாக அமைக்கப்பட்டன .மேலும் மாநகரில் சிதிலமடைந்து கிடைக்கும் அனைத்து சாலைகளையும் சீரமைக்கும்  வகையில் புதிய தார் கான்கிரீட் சாலைகள் அமைக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும்  மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும், புதிய சாலைகள் அமைக்க வேண்டும், எனவும், பல்வேறு இடங்களில் சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியவில்லை விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. அச்சத்தோடு தான் வாகனங்களை சாலைகளில் ஓட்டிச்செல்ல வேண்டிய  சூழ்நிலை இருப்பதால் மாநகராட்சி உடனே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.




இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதியில் ரூபாய் 42.50 கோடியில் 45. 96 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி முழுவதும் சேதம் அடைந்து உள்ள முக்கிய குறுக்கு  சாலைகளை அனைத்தையும் அகற்றிவிட்டு புதிய சாலைகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 கோட்ட பகுதியிலும் பாதாள சாக்கடை, குடிநீர் வினியோகம் ,மற்றும் இயற்கை பேரழிவுகள், காரணமாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும்  பணிகளை மாநில நிதிக்குழு மானியம் நிதியிலிருந்து எட்டு தொகுப்புகளாக 42.50 கோடி செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 




இதில் உறையூர் பிரதான   சாலை,  பாண்டமங்கலம், வாலாஜா சாலை, லிங்கம் நகர், நெசவாளர் காலனி, புத்தூர் சாலை,  தில்லை நகர், குறுக்குசாலை, ஸ்ரீரங்கம் வசந்த் நகர், லட்சுமி நகர், ராம்ஜி நகர், உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகள் மற்றும்  குறுக்கு சாலைகள்  உட்பட மொத்தம் 45.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலைகளை அமைக்க திருச்சி மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் குறித்து விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்ட உள்ளது. பின்பு  பணிகள் தொடங்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் அனைத்து சாலைகளிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணி  நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்