1-  டெல்டாவில்  மீண்டும் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நெற்பயிரில் 4 வகையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் ஆறு லட்சம் ஏக்கருக்கு தலா 34 , 500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கூறுகின்றனர். மேலும்  டெல்டா பாதிப்பை நேரில் பார்வையிட உள்ள மத்திய குழுவினர் இது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


2. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கங்காணி பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் , கூலித்தொழிலாளி இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ராஜ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் பழகி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் ஆனார், கருவை கலைக்க முயற்சி செய்த வழக்கில் ராஜ்குமாருக்கு  ஆயுள்தண்டனை வழங்கியது புதுக்கோட்டை மகளிர் நீதி மன்றம்.


3. திருச்சி மாவட்டம் நவல்பட்டு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் முடிவு.


4. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்களை  கடந்த 15 நாட்களில் 15 நபர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


5. திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று நோயால்  அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு.


6. கும்பகோணம் பாபநாசம் வட்டாரத்தில் தொடர் கனமழையால் விவசாய நிலங்களில் அதிகளவில் தண்ணீர் புகுந்து உள்ளதால் மிகுந்த சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



7. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களிடம் நேரடியாக 553 மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அவர்கள்,  மனுக்கள் மீதான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



8-  கரூர் முதல் பெங்களூர் வரை என தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றி வருவதால் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் கால்நடை உரிமையாளர்கள் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


9-  அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 50 மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் சிக்கியது. தொடர் கனமழையால் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 50 மாடுகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.



10- திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 1.85 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் திட்டமிட்டுள்ளார்.