திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின் தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான அளவில் உணவு வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். பின்பு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உணவு முறைகளை பற்றி கேட்டறிந்தார். மேலும் குழந்தைகள் சாபிடும் உணவு ஆகையால் சுத்தமாகவும், தரமாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பள்ளி வகுப்பறை, கழிவறை , குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.  இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மற்றும் எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் மாணவர்களுக்காக , தமிழ்நாடு முதல்வர் அறிவித்த காலை உணவு திட்டத்தை தான் ஆய்வு செய்வேன். மேலும் எனக்கு காலை உணவு என்பது பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். என்ன தான் வீட்டில் , வெளியில் சாப்பிட்டாலும், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது தான் எனக்கு மகிழ்ச்சி. மேலும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடும் போது அவர்களின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை, கல்வி முறை பற்றி கேட்டு அறிவேன். குறிப்பாக பள்ளிகளில் காலை உணவு சரியான நேரத்தில் வழங்கபடுகிறதா? ஆசிரியர்கள் சரியான முறையில் கல்வி கற்று தருகிறார்களா என ஆய்வு செய்த பிறகு தான் எனது பணியை தொடங்குவேன்.




இந்நிலையில், திருச்சி அரசு  சையது முதுர்சா பள்ளியில் ஆய்வு செய்தேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பள்ளிகல்வி துறைக்கு  பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.  ஆகையால் மாணவர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடாமல் , கல்வியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு தாயாக , தந்தையாகவும் முதல்வர், இந்த அரசு உறுதியாக இருந்து செய்லபடும்.  தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். மாணவர்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் , கல்வியை மட்டும் கற்கவேண்டும். வருங்காலத்தில் நீங்கள் ஒரு ஆசிரியர், தொழிலதிபர் ஆக வேண்டும். குறிப்பாக இந்தியாவே உங்களை திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர வேண்டும்” என்று தெரிவித்தார்.










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண