திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு விமானங்கள் மற்றும் மீட்பு விமானங்களாக மட்டுமே இயங்கி வந்த விமான சேவைகள் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் தினசரி விமான சேவைகளாக மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறு வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் திருச்சி விமான நிலையத்திலிருந்து காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், பூ வகைகள் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். சிறப்பு விமானங்களாக இயக்கப்பட்ட போது குறைந்த அளவே வெளிநாடுகளுக்கு திருச்சியில் இருந்து கார்கோ மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்றுமதியின் அளவும் அதிகரித்து வந்தது. இதற்கிடையே தற்போது திருச்சியில் இருந்து இலங்கைக்கு இரண்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அங்கு நிலவிவரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக ஒரு விமான சேவை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ஐந்து டன் வரை உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் விமான சேவை குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அளவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு 518 டன் பொருட்களும், மே மாதத்தில் 504 டன் பொருட்களும், ஜூன் மாதத்தில் 500 டன் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அதிக அளவில் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து கார்கோ சேவை மூலம் செய்வதற்கான வழிவகைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்கும்போது அவர்கள் கூறியது.. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக விமானங்கள் சேவை நிறுத்திவைக்கபட்டது. மேலும் கொரோனா பரவல் குறைந்ததும் மீண்டும் திருச்சியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. குறிப்பாக கார்கோ மூலமாக இலங்கைக்கு ஒரு விமானம் மூலம்  பழங்கள், காய்கறிகள், போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தனர். பின்பு இரண்டு விமானம் மூலம் தொடர்ந்து பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யபட்டது. ஆனால் கடந்த ஓரிரு மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி குறைந்துள்ளது என்றனர் மீண்டும் இலங்கையில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் முழுமையாக தீர்ந்தால் பழையபடி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண