திருச்சியில் அரசு பஸ்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்

திருச்சியில் அரசு பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி மாணவர்கள் பயணம் செய்ததை கண்டித்து அரசு பேருந்துக்களை சாலையின் நடுவே நிறுத்தி டிரைவர்கள்- கண்டக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

திருச்சி தீரன் நகரில் இருந்து  மதியம் 3 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து பாரதியார் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறி படிக்கட்டில் நின்று கொண்டு சத்தம் போட்டுக்கொண்டே வந்தனர்.

Continues below advertisement

இதனை பார்த்த கண்டக்டர் ராமச்சந்திரன் மாணவர்களை பேருந்தின் உள்ளே வரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பின் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கினர். இதனையடுத்து அரசு பேருந்து அங்கிருந்து சிறிது தூரம் சென்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த பள்ளி மாணவர்கள் ஓடிவந்து பேருந்தில் மீண்டும் ஏறினர். இதனை பார்த்த டிரைவர் மகேஷ் பஸ்சை நிறுத்தி மாணவர்களை கண்டித்துள்ளார். மேலும் கண்டக்டர் ராமச்சந்திரனுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாணவர்கள் கண்டக்டரின் பெயர் சொல்லி தகாத வார்த்தையால் திட்டி அங்கிருந்து ஓடிவிட்டனர். 


இதையடுத்து அந்த அரசு பேருந்தை சாலையின் நடுவில் நிறுத்தி, கண்டக்டரை திட்டிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக எதிரே வந்த அரசு பேருந்துக்களையும்  சாலையின் நடுவே நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ஜங்ஷன் பகுதியில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையிலான போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் இதுதொடர்பாக அந்த பள்ளி நிர்வாகத்திடம் பேசுவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யாதவாறு நடவடிகைகளை காவல்துறை சாரபாக எடுக்கபடும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola