திருச்சி மாநகராட்சி திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால், திருச்சி மாநகரில் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் 30.08.2024 ஒரு நாள் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.. 


திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்-III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான சுந்தராஜ நகர் புதியது,சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகர் புதியது,மலையப்பநகர் பழையது, ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது, முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது.




திருச்சியில் குடிநீர் விநியோகம் ரத்து மக்களின் உஷார் இருங்க..


முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, M.K.கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மைவீதி, M.K .கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யாநகர், ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், L.I.C புதியது, L.I.C சுப்பிரமணியநகர். தென்றல்நகர் புதியது, தென்றல் நகர் பழையது, தென்றல் நகர் E.B காலணி, வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணியநகர் புதியது, சுப்பிரமணியநகர் பழையது, ஆனந்தநகர், கே.சாத்தனூர்.


மேலும், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, ரெங்காநகர், அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி.


மேலூர், பெரியார் நகர், T.V கோவில், உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் மற்றும் சிவா நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 30.08.2024 ஒரு நாள் இருக்காது.


இதனை தொடர்ந்து 31.08.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.