திருச்சி மாநகராட்சியின் துணை மேயரானார் திவ்யா தனக்கொடி..
திருச்சி மாநகராட்சியில் முதல்முறையாக திமுகவில் 27 வயது பெண் திவ்யா தனக்கொடி துணை மேயராக பதவி ஏற்றார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் திமுக 51 வார்டுகளிலும், மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் என போட்டியிட்டது. இதில் திமுக 49 இடங்களில் அமோக வெற்றி அதேபோல் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி என மொத்தம் 59 இடங்களில் வெற்றி பெற்று திருச்சி மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநகராட்சியின் மேயராக மு. அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யபட்டு பதவியேற்றார். மேலும் துணை மேயர் பதவிக்கு கடுமையான போட்டி திமுக- காங்கிரஸ் இடையே நிலவியது. ஆனால் துணைமேயர் பதவி திமுகவை சேர்ந்தவருகுதான் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். ஆகையால் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மூத்த நிர்வாகிகள் பெரும் எதிர்பார்பில் இருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் திமுக தலைமைகழகம் திமுக-கூட்டணி கட்சிகளுக்கான இடங்களையும், திமுக சார்பாக மேயர், துணை மேயர், தலைவர் பதவிகளுக்கு போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதில் திருச்சி துணை மேயர் பதவிக்கு திவ்யா தனக்கொடி இடம் பெற்று இருந்தார். இதனை தொடர்ந்து துணை மேயராக திமுக திவ்யா தனக்கொடி போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டர். பின்பு திருச்சி மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் திவ்யா உறுதி மொழி வாசித்த பிரகு துணை மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதனால் திருச்சி மாநகராட்சியில் 28 ஆண்டுகளுக்கு பிற்கு திமுகவின் முதல் முறையாக 27 வயது பெண் துணை மேயராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Just In
திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கொடி வயது 27 ஆகும், இவர் திருச்சி மாநகராட்சி 33 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் திவ்யா கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தனக்கோடி 32 வார்டு திமுக பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். 27 வயதான திவ்யா தற்போது பி.காம் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளர் திவ்யா தனக்கொடி என்பது குறிப்பிடதக்கது.