இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1-01-2022-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக 2021ஆம் ஆண்டில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1-11-2021 முதல் 30-11-2021 வரை நடைபெற்றது. அதனடிப்படையில் தற்போது 2022 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,41,275 பேர்களும், பெண் வாக்காளர்கள் 1,48,298 பேர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேர்களும் மொத்தம் 2,89,579 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,49,866 பேர்களும்,  பெண் வாக்காளர்கள் 1,61,350 பேர்களும்,  மூன்றாம் பாலினத்தவர் 36 பேர்களும் மொத்தம் 3,11,252 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,30,667 பேர்களும், பெண் வாக்காளர்கள் 1,40,916 பேர்களும்,  மூன்றாம் பாலினத்தவர்கள் 27 பேர்களும் மொத்தம் 2,71,610 வாக்காளர்கள் உள்ளனர். 




மேலும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆண் வாக்காளர்கள் 1,24,540 பேர்களும்,  பெண் வாக்காளர்கள் 1,32,565 பேர்களும், மூன்றாம் பாலினத்தவர் 60 பேர்களும் மொத்தம் 2,57,165  வாக்காளர்கள் உள்ளனர். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி ஆண் வாக்காளர்கள் 1,44,379 பேர்களும்,  பெண் வாக்காளர்கள் 1,50,630 பேர்களும்,  மூன்றாம் பாலினத்தவர் 66 பேர்களும்  மொத்தம் 2,95,075 வாக்காளர்கள் உள்ளனர். இலால்குடி சட்டமன்ற தொகுதி ஆண் வாக்காளர்கள் 1,04,904 பேர்களும்,  பெண் வாக்காளர்கள் 1,12,794 பேர்களும்,  மூன்றாம் பாலினத்தவர் 14 பேர்களும்  மொத்தம் 2,17,712  வாக்காளர்கள் உள்ளனர். மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி ஆண் வாக்காளர்கள் 1,18,257 பேர்களும்,  பெண் வாக்காளர்கள் 1,27,096 பேர்களும்,  மூன்றாம் பாலினத்தவர் 33 பேர்களும்  மொத்தம் 2,45,386 வாக்காளர்கள் உள்ளனர். முசிறி சட்டமன்ற தொகுதி ஆண் வாக்காளர்கள் 1,12,897 பேர்களும்,  பெண் வாக்காளர்கள் 1,19,087 பேர்களும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர்களும், மொத்தம் 2,31,806  வாக்காளர்கள் உள்ளனர்.துறையூர் சட்டமன்ற தொகுதி ஆண் வாக்காளர்கள் 1,09,167 பேர்களும்,  பெண் வாக்காளர்கள் 1,17,266 பேர்களும், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர்களும், மொத்தம் 2,26,451  வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக 9 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 11,35,752 பேர்களும்,  பெண் வாக்காளர்கள் 12,10,000 பேர்களும்,  மூன்றாம் பாலினத்தவர் 284 பேர்களும்  என மொத்தம் 23,46,036 வாக்காளர்கள் உள்ளனர்.




இந்த இறுதி வாக்காளர் பட்டியல்படி அதிக வாக்காளர்கள் உள்ள சட்ட மன்ற தொகுதி  ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,11,252 ஆகும்.  அதேபோல் குறைவான வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதி இலால்குடி - 2,17,712 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 1-11-2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 11,37,113 ஆண் வாக்காளர்களும், 12,04,743 பெண் வாக்காளர்களும், 263 மூன்றாம் பாலினத்தவர்கள் ஆக மொத்தம் 23,42,119 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 1-01-2022- ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 34,677 வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 30,760 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் 11,35,752 ஆண் வாக்காளர்களும், 12,10,000 பெண் வாக்காளர்களும், 284 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 23,46,036 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் 9 சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 1410 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களது வாக்காளர் பட்டியல் இறுதி வாக்காளர் பட்டியலில் கடைசி பாகமாக சேர்க்கப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.