திருச்சி மத்திய மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, ஆகிய 9 மாவட்டங்களிலும் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்ததை அடுத்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக குற்ற செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு கைது செய்து சிறையில் அடைக்கபட்டுள்ளனர். மேலும் பாலியல் தொந்தரவு, போதைப்பொருடகள் விற்பனை செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டு வருகிறது என்றார். அதனபடி திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலையான வழக்குகள் குறித்து தீவிர ஆய்வு நடத்த உத்தரவிடபட்டது.
இதனை தொடர்ந்து நடத்திய இந்த ஆய்வில் 2019 ஆம் ஆண்டு 52 வழக்குகளும், 2020, ஆம் ஆண்டு 53 வழக்குகளும் ,2021 ஆம் ஆண்டு 8 வழக்குகளும் என பதியப்பட்ட மொத்தம் 113 வழக்குகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குற்றவாளிகளுடன் சமாதானமாக சென்றதால் வழக்கு விடுதலையானதாக தெரியவந்தது. மேலும் ஒரு சில போக்சோ வழக்குகளில் ஊர் முக்கிய வக்கீல்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என அனைவரும் இணைந்து போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் காப்பாற்றுவதற்காக பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோர்களை சமாதானம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து தண்டனையில் முடிவுறாத வழக்குகள் பற்றி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து செய்து அதன் மூலம் வழக்குகள் விடுதலையில் முடிந்ததாக தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத முறையில் கட்டப்பஞ்சாயத்து மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்தால் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குறிப்பாக குழந்தைகளுக்கு பாதுகாப்பானவர்கள் பெற்றோர்கள் மட்டுமில்லை அரசும் பாதுகாவலர்கள் தான் ஆகவே மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் விடுதலையான பல வழக்குகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து சட்டத்திற்கு பிறம்பாக தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.