திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டத்தில் தரைமட்டத் தொட்டி கட்டுதல், பெரியார் நகர், கம்பரசம்பேட்டை நீர் சேகரிப்பு கிணற்றில் புதிதாக நீர் சுற்றுவட்ட குழாய்கள் அமைத்தல், மோட்டார் பம்புசெட், டீசல், ஜெனரேட்டர், சமநிலை நீர்த்தேக்கத்தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம், மற்றும் நடைபாலம் அமைக்கும் பணிகள் என ரூபாய் 28 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பணிகளை நகர்புற அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகிறோம் என்றார்
பாரதிய ஜனதாவுக்கு கட்சிக்கும் இடையூறு ஏற்படுமானால் திமுகவின் பிசினஸில் கை வைப்போம் என தஞ்சையில் பாஜக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அக்கட்சித் தலைவர் அண்ணாமலை பேசியிருந்து குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.என்.நேரு
திமுகவினர் மிசாவை பார்த்தவர்கள், அண்ணாமலைக்கு எல்லாம் பயப்பட தேவை இல்லை, பாஜகவுக்கு புதிய தலைவராகி இருப்பதால் தன்னை காட்டிக் கொள்வதற்காக அண்ணாமலை செயல்படுவதாக தெரிவித்தார்.