திடீரென திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! அதிர்ந்து போன அதிகாரிகள்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

குறுவை சாகுபடிக்காக மேடூர் அணையில் கடந்த 24-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த நீர் தஞ்சாவூர் மாவட்ட கல்லணையை சென்றடைந்த நிலையில், அங்கிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்டா விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், காவிரி நீர் கடைமடை வரை சென்று சேரும் வகையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். 

Continues below advertisement

 

அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தமிழக முதல்வர் மு கஸ்டாலின் கழக வெளியீட்டு செயலாளர் திருச்சி செல்வேந்திரன் அவர்களை உறையூர் இல்லத்திற்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். இந்த நிகழ்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கள் கே.என். நேரு, நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் , எ வ வேலு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.


இதனை தொடர்ந்து  சாலை மார்க்கமாக சென்றபோது திடீர் என்று மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்குள்ள கோப்புகளை திடீர் ஆய்வு செய்தார். மேலும்  அங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் மனுக்கள் பெற்றதோடு, குறைகளை கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வு பணியின் போது, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், நகராட்சி சுகாதார அலுவலர் யாழினி மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்கிறார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola