திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் முக்கியமானதாகும். ஏன் என்றால் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், கல்லூரிகள், போன்ற பல சுற்றுலா தலங்களுக்கு மையமாக இங்க இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, காவேரி ஆறு, மலைக்கோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாநகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமையான சத்திரம் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 17.34 கோடியில் அதிநவீன வடிவமைப்புடன் மேம்படுத்தும் பணி கடந்த 2019 அக்டோபர் மாதம் தொடங்கியது. பேருந்து நிலையத்தின் கீழ்த்தளத்தில் 370 சதுர மீட்டரில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைதளம் 3 ஆயிரத்து 864 சதுர மீட்டரில் முதல் தளம் 687 சதுர மீட்டரில் என்று மொத்தம் 4,921 சதுர மீட்டரில் அமைக்கபடுகிறது. தலா 15 பேருந்துகள் நிறுத்தும் இடங்களுடன், 2 டெர்மினல்களும், தரைதளத்தில் 11 கடைகள், முதல் தளத்தில் 22 கடைகள், என்று மொத்தம் 33 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பயணிகள் ஓய்வு அறை, பயணிகள் நடைபாதை, பயணச்சீட்டுகள் விற்குமிடம், பாதுகாப்பான குடிநீர், பொருட்கள் பாதுகாப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, உணவகம், கழிவறை, ஆகியவற்றையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியே 8.50 கோடியில் பேருந்து நிலையம் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையத்தில் 95 சதவீதம் பணிகள் முடிக்கபட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள், த்ரைதளம் அமைத்தல், கழிவறை அமைத்தல், மின்விளக்குள் அமைத்தல், ஊர்களின் பெயர் பலகை அமைக்கும் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் நடபெற்று வரும் பணிகளை நகராட்சி நிவாக துறை அமைச்சர் நேரு, நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் பணிகளை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் சந்திர பேருந்து நிலையத்தில் அதிக அளவில் போக்குவரத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாதிக்கபட்டு வருகிறார்கள். ஆகையால் இன்றைக்குள் அனைத்து விதமான பணிகளும் முற்றிலுமாக முடிவடைய வேண்டும் என்றும், அதில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறைகளை வழங்கினார். மேலும செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், பேருந்து நிலையத்தில் சிறிய அளவிலான பணிகள் தற்போது நடைபெற்று வந்ததால், பயன்பாட்டிற்கு வர தாமதம் ஆனது என்றார். நாளை முதல் சத்திர பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.