திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். 


சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய குற்றவாளிகளின் பட்டியல்களை தயார் செய்து அவர்களை தீவிரமாக கண்காணிக்கவும்,குற்றச் செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் கூறியுள்ளார். 


பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது புகார்கள் வரும் பட்சத்தில் அதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கையை கால தாமதப்படுத்தாமல் எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.




திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியை சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவரை காதலிப்பதாக கூறி கடந்த (13.04.2024) தேதி உன்னிடம் தனியாக பேச வேண்டும் என இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று டோல்கேட் மாருதி நகர் பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் காதலன் சிலம்பரசனுடன் இருந்த 5 நண்பர்களும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 


பின்னர் அதனை வீடியோவாக எடுத்து வைத்து அந்த மாணவியை மிரட்டி பலமுறை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் ஆகி உள்ளார். கர்ப்பமான மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்த நிலையில், தற்போது மீண்டும் அந்த மாணவியை நாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் இல்லையென்றால் உனது வீடியோவை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.


இதனால் கடந்த வாரம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தாயாருடன் வந்த மாணவியின் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார்.




மேலும் பாதிக்கப்பட்ட மாணவி. கூறுகையில்.. நான் கல்லூரி படித்துவிட்டு சனி, ஞாயிறு மட்டும் வீட்டுக்கு வருவேன், அப்போது என்னை வந்து சந்தித்து என்னோடு பேசி பழகினான். பின்னர் ஒரு நாள் என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவனும் அவனுடைய நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து என் வாழ்க்கையை வீணாக்கி விட்டனர். அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறான் என்றார்.


மேலும் அவன் அமைச்சர் மகேஸ் இடம் ஓட்டுனராக பணிபுரிவதாக என்னிடம் பொய் கூறி பழகினான் என பாதிக்கப்பட்ட மாணவி கூறினார்


இந்நிலையில் மாணவியின் தாய் திருச்சி மாவட்ட காவல் கண்காணிபாளர் வருண்குமாரிடம் அளித்த புகாரின்பேரில், லால்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அழகம்மை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிலம்பரசனைத் தேடி வந்தனர். இந்நிலையில், சமயபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த சிலம்பரசனைப் போலீஸார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.