திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நீரேற்று நிலையத்தில் மின் இணைப்பு வழங்கப்படாததால் அடுத்த நாள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும். இதேபோல் கடந்த சில நாட்களிலும் ஒரு நாள் குடிநீர் வினியோகமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது..
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர் கபன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 10.09.2024 இன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இருக்காது.
துணை மின் நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாது. ஆகையால் நாளை 11.09.2024 ஒருநாள் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் இருக்காது. ஆகையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தங்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் குடிநீர் ரத்து செய்யபட்ட நாட்களில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து,12.09.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.