தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 31 வது நிறுவன நாள் மற்றும் விவசாயிகள் தின விழா,  திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது.


இவ்விழாவில்  மத்திய அரசின் தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு தலைவர் திரிலோச்சன் மொகபத்ரா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 


மேலும் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில் நுட்பம் மற்றும் நிர்வாக இயக்குனர் பழனிமுத்து, ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஷேக் என். மீரா, பெங்களூர் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாழை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற 100 க்கும் மேற்பட்ட வாழைத்தார் ரகங்களை விழா அரங்கில் காட்சிப்படுத்தினார்கள். 


அதில் குறிப்பாக தேனியில் இருந்து கொண்டுவரப்பட்ட கிரேட் நயன் என்ற பச்சை நாடான் வாழைத்தார் 15 சீப்புகளுடன் 282 வாலை காய்களுடன் மிக சிறப்பாக வளர்ந்து இருந்தது காட்சிப்படுத்தப்பட்டது.


மேலும் செவ்வாழை, நேந்தரம், பூவன், பச்சை, ரகங்கள், ஏலரிசி, நெய் பூவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.




100-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் கண்காட்சி 


மேலும் வாழை உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு தொழில்நுட்ப முறைகள் வாழைக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து வகைகள் வாழையை தாக்கும் திகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை மையங்கள் இடம் பெற்றுள்ளது. 


மேலும், வாழை விவசாயத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு பொருட்களான வாழை நாரை கொண்டு தயாரிக்கப்பட்ட கைப்பைகள் வாழை பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸ் வகைகள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் வகைகள் உள்ளிட்டவைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றது.


வாழைத்தார்கள் மற்றும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பால்கள் என அனைத்தையும் சிறப்பு விருந்தினரான மத்திய அரசின் தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு தலைவர் திரிலோச்சன் மொகபத்ரா திறந்து வைத்து பார்வையிட்டார். 




கேரட்டில் உள்ள கரோட்டின் சத்து உள்ள வாழை கண்டுபிடிப்பு..


தொடர்ந்து தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது ...


புதிதாக சக்கரை நோயாளிகள் உண்ணக்கூடிய வாழை பழம் கண்டு பிடித்து உள்ளோம் ,கேரட்டில் உள்ள கரோட்டின் சத்து உள்ள வாழை கண்டுபிடித்து உள்ளோம்.


இதை ஓரிரு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு தர உள்ளோம். மதிப்பு கூட்டு பொருள் 45 உற்பத்தி செய்து உள்ளோம், இதற்கு 200 மேற்பட்டோருக்கு லைசன்ஸ் வழங்கி உள்ளோம். 


மேலும், நடப்பு ஆண்டில் மாநில விவசாயிகள் சாகுபடி செய்யும் வகையில் காவேரி காஞ்சன் என்ற புதிய வாழை ரகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காவேரி வாமன் மற்றும் காவேரி காஞ்சன் ரகங்களை மத்திய ரகங்களாக வெளியிட மத்திய குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


குறிப்பாக 3.40 லட்சம் டன் ஏற்றுமதி செய்து உள்ளோம், இதில் இருந்து 1200 கோடி லாபம் வந்துள்ளது.


மேலும் ஏற்றுமதி தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கும்,ஏற்றுமதியாளர்களுக்கு சென்றடைய விவாதம் நடைபெறுகிறது.வரும் ஆண்டுகளில் ஏற்றுமதி பெறுக வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.