மணப்பாறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்


திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை கிழக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் இளைஞர் அணியினரால், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கப்பட்ட நூலகங்களில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென் திசையின் தீர்ப்பு என்ற ஒரு புத்தகத்தில் 40க்கு 40 என்ற வெற்றியை எவ்வாறு பெற்றோம் என்கின்ற யுத்தியையும், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஆற்றிய பணியையும் தொகுத்து வழங்கியுள்ளார். 


மேலும் இந்த புத்தகங்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் இடம்பெற வேண்டும் என சொல்லி இருந்தார்கள். அதன்படி இன்றைய தினம் மணப்பாறை தொகுதியிலும் அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய நூலகங்களில் புத்தகங்களை வைக்க உள்ளோம் என்றார்.





கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம்- அமைச்சர் அன்பில் மகேஷ்


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது... 


கள்ளர் சீர்மைப்பு பள்ளிகளை இணைப்பை கண்டித்து அதிமுக சார்பில் 24 ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று 2023 – 24 ம் ஆண்டு அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்தவர்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள்.


மேலும், அந்த அறிவிப்பு வந்த பின் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்து குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து இருக்கின்ற அமைச்சர்கள் கருத்துக்களை என்னிடம் வழங்கினார். அது குறித்து அறிக்கை உள்ளது. ஆனால் அது குறித்து எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.


பல அமைப்புக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதெயல்லாம் தொகுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இறுதியாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தலாம்.




ஆனால் எந்தமுடிவும் எடுக்கப்படாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானது அல்லது. கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார். 


மேலும், முதல்வர் முடிவெடுத்த பின் தங்களின் கருத்தக்களை தெரிவிக்கலாமே தவிர யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து. 3 ஆண்டுகளில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதுடன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தருவேன் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள்.


இதில் எதிர் கட்சித் தலைவர் எந்த குரலும் கொடுக்காத நிலையில்,  இறுதி முடிவு எடுக்காத ஒரு விஷயத்திற்கு போராட்டம் என்பது 2026 ம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்போதே அரசியல் செய்ய நினைக்கிறார். ஆகையால் ஆர்ப்பாட்டம் - பேராட்டத்தை கைவிடுங்கள், தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என கூறினார்.