திருச்சி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... அட்ரா சக்க.. இதைதான் எதிர்பார்த்தோம்: வரும் 30ம் தேதி முதல்

சென்னைக்கு நிகராக தற்போது திருச்சி வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

தஞ்சாவூர்: அட்ரா சக்க... வரும் 30ஆம் தேதி முதல் திருச்சி - மும்பை விமானச் சேவையா என்று அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அட ஆமாங்க. 30ம் தேதியிலிருந்து திருச்சி - மும்பைக்கு ஏர் இந்தியா விமான சேவை தொடங்குகிறது. 

Continues below advertisement

இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரான துரை வைகோ என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?

பிப்ரவரி 14ஆம் தேதி டெல்லியில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்குச் சென்று, உயர் அதிகாரிகளைச் சந்தித்து, திருச்சியிலிருந்து உள்நாட்டு விமானச் சேவைக்கான அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தேன். அதை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சென்னைக்கு விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது.

இதுவரை, 37 பன்னாட்டு விமானச் சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சியில் செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக உள்நாட்டுப் போக்குவரத்தைத் தொடங்கியிருப்பதால் திருச்சி மற்றும் 11 சுற்று வட்டார மாவட்ட மக்களின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவது மிக முக்கியம் என்பதால் விமானம், ரயில், சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக விமானப் போக்குவரத்து துறை, ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடன் இடைவிடாது பணியாற்றி வருகிறேன். வரும் 30ம் தேதி திருச்சி - மும்பை விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த திருச்சி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கப் பணிகள் 99 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி இப்போது மிக வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. பஞ்சப்பூரில் பேருந்து முனையம், ஐடி பார்க், புட் பார்க் என்று திருச்சி இப்போது பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகிறது.  அதற்கேற்ப தற்போது திருச்சி விமான நிலையத்திலிருந்து கூடுதலாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு தொழில் முனைவோர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னைக்கு நிகராக தற்போது திருச்சி வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement