அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி. பழனிசாமி  ஆணைக்கிணங்க, திருச்சி மாநகராட்சியை கண்டித்து, திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


திருச்சி மாநகராட்சி 17,19,20 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்து அதனை பொதுமக்கள் குடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மஞ்சள்காமாலை, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மேலும், பலர் இறந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் மாநகராட்சி இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருகிறார்கள். மக்களின் உயிர் மேல் எந்த அக்கறையும் பாராமல் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான திமுக அரசையும், திருச்சி மாநகராட்சியையும் கண்டித்து,  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


இதற்கு கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ப.மோகன் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னிலையில், நடைபெற்றது. 




திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு, செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வரிகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ , தேமுதிக மற்றும் வியாபார சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்றனர். 


மேலும், அதிமுக அமைப்பு செயலாளர்கள், ரத்தினவேல், மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், வழக்கறிஞர் முல்லை சுரேஷ், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.






திருச்சி அதிமுக பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா கைது..


இந்நிலையில் மேடையில் பேசிய திருச்சி அதிமுக காந்திசந்தை பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா பேசியது.. 


திமுக அமைச்சர்கள் மற்றும் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் குறித்து அவதூறு பேச்சுகளை பேசியதாக புகார் எழுந்தது. அதன் பேரில் திருச்சி காந்திசந்தை போலீஸார், அவர் மீது அவதூறுப்பேச்சு, ஆபாசமாக பேசுதல், மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து நேற்று  அவரைக் கைது செய்தனர்.


திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது, அங்கு சுரேஷ்குப்தா மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரைப் போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும், இதனை தொடர்ந்து நேற்று இரவு 11 மணி வரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அதிமுக வழக்கறிஞர்கள், வாதிட்டு பின்பு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.