திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் பொருத்தும் திட்டம்  தார் சாலை மற்றும் கான்கீரிட் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்காக  முக்கிய சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் திருச்சியில் நாள்தோறும் வெயில் சுட்டெடுத்து வந்தாலும் அவ்வப்போது இரவு நேரங்களில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது.  இந்த நிலையில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டுகளும் பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் அவ்வபோது வாகனங்கள், பேருந்துகள் லாரிகள், கனரக வாகனங்கள் சாலையில் தோண்ட பள்ளத்தில் சிக்கி கொள்வது தொடர் கதையாகி இருந்து வருகிறது இது மட்டுமின்றி இரு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் நிலை தடுமாறி அந்த பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்படும்  சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது போல திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள வீரமாமுனிவர் தெரு முனையில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டி ஒருவர் நிலை தடுமாறி விழுந்து விட்டார். உடனடியாக நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரையும் அவரது வாகனத்தையும் மீட்டனர்.


 






 


மேலும், இது போன்ற விபத்து இரவு நேரத்தில் ஏற்பட்டிருந்தால் மிக பெரிய உயிர் சேதம், பொருட்கள் சேதம் ஏற்பட்டிருக்கும் . இந்த விபத்து சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில்.. திருச்சி மாநகர் வளர்ச்சிக்கு பாதாள சாக்கடை திட்டம்,  குடிநீர் குழாய் திட்டம் செயல்படுத்துவது வரவேற்க்ககூடிய விஷயம் தான். இன்னும் சிறிது நாட்களில் பருவ மழை காலம் வர இருக்கிறது.‌‌  இதே போன்று சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனே மூட வேண்டும். இது போன்ற  ஆபத்தான சாலையில் தினம் தினம் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமே மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைகள் சீரமைப்பு பாதாள, சாக்கடை பணி குடிநீர் குழாய் அமைப்பது தரமற்ற முறையில் பணிகள் நடைபெறுவதே விபத்துக்கு முக்கிய காரணம் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் தெரிவித்தும் அதை கண்டுகொள்ளாமல் தரமற்ற பணிகளை செய்து வருகிறார்கள். எனவே உடனடியாக இது போன்று உள்ள அனைத்து  பள்ளங்களையும் சீர் செய்து தார் சாலை மற்றும் கான்கீரிட் சாலை அமைக்க வேண்டுமென திருச்சி மாநகராட்சிக்கு பொது மக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.