திருச்சி TVS டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் இன்று  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டத்தில்,  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் அன்பழகன்,  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை  தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு மேடையில் பேசியபோது..  கிராம புறங்களில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கபடுகிறது. ஆனால் கிராம புறங்களில்  பணியாற்றும் மருத்துவர்களுக்கு பதிவு உயர்வு கொடுத்தால் மற்றவர்கள் ஆர்வத்துடன் பணியாற்ற வருவார்கள்  எனது கருத்து என  அமைச்சர் நேரு தெரிவித்தார். மேலும் நாங்கள் இல்லை என்றால் மருத்துவருக்கு வேலை இல்லை, கழிவு நீர் சுத்தம் செய்வது சுத்தமான குடிநீர் வழங்குவது, குப்பைகள் அகற்றுவது போன்ற அனைத்தும் நகராட்சி துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார துறைக்கு எங்களால் முடிந்த அளவிற்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.  தற்போது புதிய புதிய நோய்கள் பரவுகிறது. ஆகையால் அனைவரும் ஒன்றினைந்து செய்லபட்டால் மக்களை காப்பாற்றமுடியும் என்றார்.




தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசாங்கமே நீங்கள்தான் ,நாங்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வெற்றி பெற்றால்  மட்டுமே அமைச்சர்கள்,  ஆனால் நீங்கள் தொடர்ந்து அரசு அதிகாரிகள் இருக்கிறீர்கள் ,நீங்கள் தான் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.  தமிழகத்தின் சுகாதார துறை அமைச்சராக மா.சுப்ரமணியன் பதவி ஏற்றதிலிருந்து சுகாதார துறையில் இதுவரை வரலாறு காணாத கஷ்டங்கள் வந்துள்ளது. இவற்றை அனைத்தையும் கையாண்ட விதத்தை பாராட்டுகிறேன்.  திருச்சி மாவட்டத்திற்கு  சித்த மருத்துவ கல்லூரி, பல் மருத்துவ கல்லூரி அமைத்து தர வேண்டும் என அமைச்சர் நேரு கோரிக்கையை முன்வைத்தார்.  மேலும் மருத்துவர்கள் என்ன குற்றங்கள் செய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். தண்டனை கொடுக்கமாட்டோம்.  ஏனென்றால் கொரோனா காலத்தில் உடன்பிறந்த சகோதரர்களை கூட விட்டு ஓடிய காலத்தில் தன் உயிரை துட்சயமாக எண்ணி பணியாற்றியவர்கள் மருத்துவர்கள்.  ஆகையால் உங்களுடன் எப்போதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார்.




மேலும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்கள் 20 ஆண்டுக்கு முன்பே திருச்சிக்கு  49.99 கோடி நிதியை  மருத்துவமனை கட்டிடத்திற்கு ஒதுக்கினார். மருத்துவமனை மேலும் புதிய கட்டிடங்கள் மற்றும் பல தேவைகள் உள்ளதாக கூறுகிறீர்கள்.  ஆனால் இங்கு ஒரு மலை இருக்கிறது, நிதித்துறை என்பது மிக முக்கியமான ஒன்று எனவே உங்களது கோரிக்கைகளை நாங்கள் முடிந்த வரை பூர்த்தி செய்வோம் என அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் நேரு தெரிவித்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.