தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. குறிப்பாக ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் கீழ்அரசூர் ஊராட்சியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம நிர்வாகிகள் கல்லக்குடி  காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளனர். கல்லக்குடி காவல் நிலையத்தில் காவல்துறையினர் கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது, ஆகையால்  ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என எச்சரித்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கீழ அரசூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கல்லக்குடி உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் காவல்துறையினர் கீழ அரசூர் கிராமத்திற்கு சென்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்றனர். மேலும்  ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வைக்கபட்டு இருந்த  அனைத்து பலகைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.




அதனை தொடர்ந்து  மீண்டும் காவல்துறைக்கு அப்பகுதியில் ஜல்லிகட்டு நடத்துவதாக தகவல் தெரிந்து இரண்டாவது முறையும் சென்று மக்களை கலைந்து செல்லுமாறு கூறி உள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள் அரசு விதிமுறைகளை மீறி  மீண்டும் மூன்றாவது முறை மாடுகளை அவிழ்த்து விடுவதாக தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று கலைந்து போக சொன்னனர்.மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு சில கட்டுபாடுகளுடன் ஜல்லிகட்டு போட்டியை நடத்த அரசு அனுமதியளித்துள்ளது. ஆகையால் விதிமுறைகளை மீறி ஜல்லிகட்டு நடத்த கூடாது என இரண்டு முறை எச்சரித்தோம் என்றனர். மேலும் தடையை மீறி மூன்றாவது முறையாக ஜல்லிகட்டு நடத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது ஆகையால் அனைவரும் இங்கு இருந்து கலைந்து செல்லுங்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்தனர்.




இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் குவிந்த மக்களை அப்புறபடுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிகட்டு போட்டியில் கலந்துக்கொள்ள வந்த காளை உரிமையாளர்கள், வீரர்கள் ஆகியோர் போட்டி நடத்த கூடாது என தெரிவித்ததால், ஆத்திரமடைந்த வீரர்கள் சரமாரியாக கல் வீசினார்கள். இதனால் இதில் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மீது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலிதவி பெற்று மேல் சிகிச்சைக்காக  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி நமச்சிவாயம் இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகிறன்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த கிராமத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தனர்.