தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் லிட் சார்பில் வருகிற 30 மற்றும் 1-ந் தேதி (சனி, ஞாயிறு) வாரவிடுமுறை, 28-ந் தேதி மிலாடிநபி, 2-ந் தேதி காந்திஜெயந்தி என தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும் என கூடுதலாக 27, 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் மொத்தம் 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. மேலும் அதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும், இயக்கப்படுகிறது.




விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 2, 3-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வரும் 27, 28, 29, 30-ந் தேதிகளில் தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்துபயணிக்க வேண்டும். முன்பதிவு செய்வதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு செய்வதன் மூலம் தேவையை கணித்து அதற்கேற்ப பஸ் சேவை அளிக்கப்படும். எனவே, பயணிகள் www.tnstc.inஇணையமுகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மிகுந்த பாதுக்காப்புடன் பயணம் செய்து விடுமுறை நாட்களை சந்தோஷமாக கொண்டா வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது. குறிப்பாக மக்களின் பாதுகாப்பிற்காக பேருந்து நிலையம் முழுவது காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.