புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ராஜேந்திரன் (வயது 45), அண்ணாதுரை (56). இருவரும் அப்பகுதியில் உள்ள அஞ்சலை (60) என்பவரின் வீட்டில் அடைத்து வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு அஞ்சலையும் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேருக்கும் உடந்தையாக இருந்த அஞ்சலையையும் கைது செய்தனர்.




 


மேலும், இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ராஜேந்திரன், அண்ணாதுரை ஆகிய 2 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1½ லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், பெண்ணை கடத்தி வந்ததற்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், பெண்ணை வீட்டில் அடைத்து வைத்ததற்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், மேலும் தலா ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் உடந்தையாக இருந்த அஞ்சலைக்கும் இந்த தண்டனையும் விதித்தார். 3 பேரும் தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி 3 பேரும் தலா 31 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளனர்.




இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணமாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரன், அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் திருச்சி மத்திய சிறையிலும், அஞ்சலையை திருச்சி மகளிர் சிறையிலும் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் ஹேமலதா, ஏட்டு ரம்யா ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.