திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை ரயில்வே  பனிமலையில் மேக்கின் இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் 112 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. நீராவியால் இயக்கப்பட்டு வந்த மலை ரயில் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது. இதில் பயணிக்கும்போது நீலகிரியின் இயற்கை எழிலையும், வன விலங்குகளையும், மலை முகடுகளில் கண்டு ரசிக்க முடியும். இதனால் இதில் பயணம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில், இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.




இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக ரூபாய் 8.50 கோடியில் கோல்பிரெட்  எனப்படும் நிலக்கரியால் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் இன்ஜினினும், அதேபோல ரூபாய் 9 கோடியே 80 லட்சத்தில் பர்னஸ் ஆயில் மூலம் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் இன்ஜினும், திருச்சி மாவட்டம் பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடந்தது. அப்போது சில தவறுகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது இரண்டு ரயில் இஞ்சின்களும் தண்டவாளத்தில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக திருச்சி பொன்மலை பணிமலை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இன்ஜினில் சுமார் 3600 பாகங்கள் உள்ளன அவற்றில் 1400 பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனையிலும், மீதமுள்ள பாகங்கள் தமிழகத்தில் கோவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாங்கி வரப்பட்டு முற்றிலும் இந்திய தயாரிப்பாக மலைரயில் உருவாக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




இதில் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க், 3.5 டன் எடை நிலக்கரியை எரிபொருளாக எடுத்து செல்ல முடியும். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 4 நீராவி இன்ஜின்கள் பொன்மலை பனிமலையில் தயாரிக்கப்பட்டு பர்னஸ் ஆயில் மூலம் எரிக்கப்பட்டு நீராவியால் இயக்கப்படுகிறது. இந்த முறை ரயில்கள் வண்ணத்திலும், வடிவமைப்பிலும், அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 முதல் 11 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். தயாராக உள்ள மலை ரயில் திருச்சி பொன்மலை பணிமனையில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நீலகிரிக்கு  கொண்டு செல்லப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஊட்டிக்கு செல்லும் நீராவி இன்ஜினின் செயல்பாட்டை தென்னக இரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில் பொன்மலையில் இந்த இரண்டு இன்ஜின்களும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மிகவும் பெருமையாக உள்ளது. முழுக்க முழுக்க பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு இன்ஜின்களும் மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என தெரிவித்தார். மேலும் இந்தப் பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், பாராட்டுக்களை தெரிவித்தார்.