சென்னையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னைக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும்.
இதன் காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மித கனமழைக்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு:
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 இழப்பீடு என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
835 பேருக்கு கொரோனா:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா
கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் கரம்பீர் சிங் இம்மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தளபதியாக ஆர். ஹரிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
நியூசிலாந்து அணியுடனான டி20 போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் டி20 உலகக் கோப்பையை போல் இந்தத் தொடருக்கும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் ஜடேஜா, பும்ரா, ஷமி உள்ளிட்டவர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: ரோகித் சர்மா(கேப்டன்),கே.எல்.ராகுல்(துணை கேப்டன்),இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர்,ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல்,புவனேஸ்வர் குமார்,ஹர்சல் பட்டேல்,அவேஸ் கான், தீபக் சாஹர், முகமது சிராஜ்,அக்சர் பட்டேல்,ஸ்ரேயாஸ் ஐயர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்