இன்றைய பிக்பாஸ் சீசன் 5 ப்ரொமோவே என்ன நடக்கப் போகிறது என்பதை கிட்டத்தட்ட கூறிவிட்டது. அடி தடி, ரகளை தான்.
புதிய தலைவராக தேர்வான இசைவாணி, காயின் மூலம் தலைவர் ஆனதால் அதற்காக பிக்பாஸ் வழங்கிய தண்டனை குறித்து போட்டியாளர்களிடம் பேசினார். யாருக்கு என்ன உணவு வேண்டினாலும் மணி அடித்தால் வந்து உதவி செய்வேன் என அறிவித்தார்.
அதன் பின்பாக பிக் பாஸ் டாஸ்க் இமான் அண்ணாச்சி மூலம் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இது ஒரு நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க். மற்றொருவரின் வெற்றிக்காக போட்டியாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதே இந்த டாஸ்க். அவரவர் பெயர் போட்ட பொம்மை வெளியில் வைக்கப்பட்டிருக்கும், தனது பெயர் போடாத பொம்மையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள குடிலில் வைக்க வேண்டும். கடைசியாக வரும் பொம்மையில் பெயர் உள்ளவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவர்.
முதல் சுற்றிலேயே இந்த டாஸ்மாக் அதிகமாக இருக்கும் என தெரியவந்தது. இது ஒரு லக்சரி பட்ஜெட் டாஸ்க் என்பதால் இதில் கடுமையான போட்டி இருந்தது. முதல் சுற்றில் தாமரை இறுதியாக வந்ததால் அவர் கையிலிருந்த பொம்மை அடிப்படையில் பிரியங்கா வெளியேற்றப்பட்டார்.
தான் வெளியேற்றப்பட்டதில் நிரூப் செய்த வேலைகள் தான் காரணம் என பிரியங்கா பகிரங்கமாக அனைவரும் முன்னிலையில் குற்றம் சாட்டினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இரண்டாவது சுற்றில் அண்ணாச்சி கடைசியாக வந்து சிபி வெளியேற்றப்பட்டார். இந்த சுற்றில் நிரூப், மதுமிதாவை குடிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த பொழுது அவர் கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் வரும் நிரூப் இடையே சண்டை ஏற்பட்டது. இரண்டாவது சுற்று முடியும் போதே எஞ்சியிருக்கும் 10 சுற்றுக்கள் என்ன ஆகப்போகிறதோ என்கிற எண்ணம் அனைவரிடத்திலும் வந்தது.
மூன்றாவது சுற்றில், வருண்-நிரூப் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடைசியில் இருவரும் உள்ளே செல்லாமல் வெளியிலேயே ஒருவரை ஒருவர் வெளியேற காத்திருந்தனர். இதனால் போட்டியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாக வசை பாடி கொண்டனர்.
இதற்கிடையில் பஞ்சாயத்து செய்ய உள்ளே வந்த சிபி, கடந்த வார டாஸ்க் குறித்து பேசும்போது சில வார்த்தைகளை கூறியதாக கூறி அக்ஷரா கடுமையாக சிபியை எச்சரித்தார். வருண்-நிரூப் பிரச்சினை இப்போது அக்ஷரா-சிபி பிரச்சினையாக மாறியது. விதிகள் மீறப்பட்டதாக அந்த சுற்றி பிக் பாஸ் ரத்து செய்தார். இனி அவரவர் பெயரில் உள்ள பொம்மையை எடுத்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
மீண்டும் டாஸ்க்கை துவங்கிய போது தனது பெயர் கொண்ட பொம்மையை அக்ஷரா தூக்கியதால் அவர் வெளியேற்றப்பட்டார். மீண்டும் நடந்த டாஸ்க்கில் அண்ணாச்சி கடைசியாக கொண்டு சென்ற பொம்மையில் வருண் பெயர் இருந்ததால் வருண் வெளியேற்றப்பட்டார்.
அடுத்த டாஸ் துவங்கியதும் மீண்டும் அண்ணாச்சி தாமதமாக வந்து ராஜூவை வெளியேற்றினார். வழக்கம்போல வெளியேறினாலும், அனைவரையும் சிரிக்க வைத்து அதற்கான காரணத்தைக் கூறினார் ராஜூ.
பூவுக்கு பிறந்தநாளோ பாடல் போட்டு பாவனிக்கு பிக்பாஸ் வாழ்த்துக் கூறினார். இந்த அனைவர் முன்னிலையிலும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் பாவனி. அடிதடியில் தொடங்கி இறுதியில் பாவனி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முடிந்தது இன்றைய பிக் பாஸ். இன்னும் 9 சுற்றுகள் இருக்கிறது. நாளையும் வெடிக்கும்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்