திருவண்ணாமலை: விஜயின் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி செல்ல தயாராகி விட்டார், விஜய் கூட்டணிக்கு வந்தால் பாஜகவையும் கழட்டி விடுவார் அவர், அதிமுக கட்சி கூட்டத்தில் அதிமுக கட்சி தொண்டர்களை வைத்து தவெக கொடியை தூக்கிப்பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Continues below advertisement

அரூர் மாவட்டத்தில் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பங்கேற்க வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுக்க பயணம் செய்யும் எடப்பாடி அனைத்து இடங்களிலும் காட்டுக் கூச்சலும் பேய் ஆட்டமும் ஆடி வருகிறார். அரசியலில் பழனிசாமி கம்பெனி தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும் அதிமுக கூட்டத்தில் அதிமுக சின்னம் பொறித்த டீ சர்ட் அணிந்து கொண்டு தவெக கொடியை காட்டி வருகிறார்கள் என விமர்சித்த அவர் அதைக் கூட அவர்களுக்கு சரியாக செய்ய தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் கொடுமையான துயர சம்பவம் கரூரில் நடைபெற்று இரண்டு வாரம் ஆன சூழ்நிலையில் வீடு பற்றி எரியும் பொழுது சுருட்டுக்கு நெருப்பு கேட்பது போலும், ஆடு நனைகிறதே என ஓநாய் கண்ணீர் விடுவதைப் போல பழனிசாமி நடந்து கொள்வது மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். எடப்பாடி பழனிசாமி விஜயின் தலைமையை ஏற்று அவர்களது கூட்டணிக்கு செல்ல தயாராகிவிட்டார் என்று கூறியவர் இதிலிருந்து எடப்பாடி பழனிசாமி பலவீனம் ஆகிவிட்டார் என்று தெரிகிறது என்றார்.

Continues below advertisement

மற்ற கட்சி கொடியை தன் கட்சி தொண்டர்களிடம் கொடுத்து கூட்டத்தில் வீச சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் கூறினார். எந்த ஒரு கட்சி தொடங்கும் போதும் மற்ற கட்சி வந்து இணையும் என்ற நோக்கத்தில் தொடங்குவது அல்ல என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாக பாஜகவிற்கு ஆதரவாக இருப்பேன் என நன்றி வேஷம் போடுவதாகவும், 2024 பாராளுமன்ற தேர்தல் முக்கியமான தேர்தலாக இருந்த பொழுது வெளியே வந்த எடப்பாடி என்னென்ன பேசினார் என்று அனைவரும் அறிந்த ஒன்று என்றும் மத்திய பாஜக அரசுக்கு துரோகம் செய்த அவர் தற்பொழுது கூட்டணி வைத்தால் என்ன தவறு என்று கேட்பது பல்வேறு லாபங்களை பாஜகவில் இருந்து சம்பாதித்த எடப்பாடி ஏன் அக்கட்சியை விட்டு பாராளுமன்ற தேர்தலின் போது வெளியேறினார் என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மையற்றவர், துரோகத்தை தவிர வேறு ஏதும் அவருக்கு தெரியாது எனவும், விஜய் கூட்டணி வந்தால் பாஜகவை கூட கழட்டிவிட தயாராக இருப்பார் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்தவர் ஆனால் விஜய் கூட்டணிக்கு வருவாரா? என்பது தெரியவில்லை என்றும் கூறினார். தனது தொண்டர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இது போன்ற பல்வேறு செயல்களில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி அணி தற்போது பலவீனம் ஆகிவிட்டது என்றும் விமர்சித்த அவர் இதனை பாஜகவும் யோசிக்க வேண்டும் என்றார்.

எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி இருந்தால் அக்கட்சி நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியமாக பலவீனம் அடைந்து வரும் என்று விமர்சித்தார். தேர்தல் நேரத்தில் 15 சதவீதத்திற்கும் கீழ்தான் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ள கூட்டணி வரும் என்றும் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் தான் அனைத்து மாநில அரசுகளும் செயல்படும் என்றும் தமிழ்நாட்டு உரிமைகளை விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மாநில அரசு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூர் வழக்கு சிபிஐக்கு செல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் கூறினார். இதற்காக நான் திமுகவை ஆதரித்து பேசுவதாக கூற வேண்டாம் நான் நடுநிலை ஆனவன் என்றும் கூறினார்.

கரூர் சம்பவத்தில் அமைச்சர்செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பில்லை என்றும், தானும் தனது கட்சியும் வெற்றி பெற வேண்டும் என்று அயராது உழைப்பவர் அவர் என்றும் ஆனால் அதற்காக இதுபோன்ற கொடூர சம்பவத்தில் எல்லாம் அவர் ஈடுபட மாட்டார் என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமி இடம் இருப்பது அதிமுக அல்ல எடப்பாடி அதிமுக என்றும், எடப்பாடியுடன் இருப்பவர்கள் அவரது பயனாளிகள் என்றும் உண்மையான தொண்டர்கள் யாரும் இல்லை என்றும் விமர்சித்தவர் தனது குடும்ப கட்சியாக எடப்பாடி அதிமுகவை வைத்துள்ளதாகவும் அதற்கு பெயர் EDMK என்றார்.

வருகின்ற 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ள இடத்தை மகானாகவும் அவரை ஒரு சித்தராகவும் மக்கள் வழிபட்டு வருவதாகவும் காவல்துறையினர் அதற்கு கட்டுப்பாடு விதிப்பது அனைத்து ஆட்சியிலும் உள்ளது என்றார். இதனை நல்ல முடிவாக தான் பார்ப்பதாகவும் கூறினார். டாஸ்மாக் ஊழல் குறித்து எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் மீது ஊழல் குற்றச்சாட்டு எவ்வளவோ உள்ளது என்றும் இதுபோன்று ஊழல் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் நீதிமன்றம் செல்லாமல் ஊர் ஊராக சென்று காட்டுக் கூச்சலிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.