விழுப்புரம்: பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Continues below advertisement

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டில் மிகவும் பழமையான கோயிலாகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், தமிழ்நாட்டின் சிறந்த துறவிகள் மற்றும் கவிஞர்களால் ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் முக்கியமானவர்கள் அப்பர், சம்பத்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் மற்றும் அருணகிரிநாதர். அருணாச்சலேஸ்வரர் இங்கு நெருப்பின் வடிவத்தில் பிரார்த்தனை செய்யப்படுவதால், இது அனைத்து சிவ பக்தர்களிடையேயும் பெரும் நற்பெயரைக் கொண்டுள்ளது, நெருப்பு இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய ஐந்து கூறுகளில் ஒன்றாகும். பஞ்சபூதங்களின் மற்ற நான்கு கூறுகள் வாயு, ஆகாஷ், ஜலம் மற்றும் பூமி. இந்த அழகான கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ் வரும் அண்ணாமலை மலைகளின் அடிவாரத்தில் சுமார் எண்பது கிலோகிராம் பரப்பளவில் அமைந்துள்ளது.

பவுர்ணமி சிறப்பு ரயில்

மலையை சுற்றி உள்ள கிரிவலப்பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

Continues below advertisement

இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 6-ந் தேதி 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும்.

விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள்:

பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது வெறும் காலுடன் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கிரிவலம் முழுவதும் கிரியின் உச்சியை எப்போதும் பாருங்கள்.

கிரிவலம் பௌர்ணமி இரவுகளில் அல்லது சாதாரண இரவுகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுவது நல்லது.

கிரிவலத்தின் போது அண்ணாமலையார் துதியை சொல்ல வேண்டும் .