பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் இன்று அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். சம்பந்த விநாயகர் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட கோவிலின் பல்வேறு பிரகாரங்களை வழங்கிய பிறகு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

Continues below advertisement

கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்

 

திருவண்ணாமலையில் அனுதினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் கிரிவலப் பாதையை சுத்தம் செய்து விட்டும் கழிவறையை திறந்து விட்டும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததாக தெரிவிப்பதாகவும், ஆனால் மற்ற நாட்களில் கிரிவலப் பாதையில் குப்பைகள் தேங்கியுள்ளதாகவும், கழிவறைகள் பூட்டி இருப்பதாக குற்றம் சாட்டினார். அனுதினமும் கிரிவலப் பாதையை சுத்தம் செய்து கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், அண்ணாமலையார் கோவிலில் அதிகளவு பக்தர்கள் வருவதால் பக்தர்கள் தங்குவதற்காக வசதிகள் அவர்களுக்கான அன்னதான வசதிகள் ஆகியவற்றை முறையாக ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவித்தார். 

Continues below advertisement

கோயில் உண்டியல் வருவாய் தமிழக அரசு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் எதிரே அடுக்கமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கான அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் முன்னெடுத்தது எனவும், இதனை சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கு மாடி கட்டிடம் கட்ட தடை விதித்துள்ளதாகவும், லட்சகணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் ராஜகோபரத்தை தரிசனம் செய்து மன நிம்மதி அடையவே திருவண்ணாமலைக்கு வருவதாகவும், இது போன்ற கட்டிடங்கள் கட்டுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும், பக்தர்களின் மன நிம்மதியை தமிழக அரசு புரிந்து கொண்டு கட்டிடம் கட்டுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். திமுக அரசு ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக பெருமையாக பேசிக் கொள்வதாகவும், ஒவ்வொரு கோயில்களின் கும்பாபிஷேகத்தையும் அரசால் மட்டுமே நடத்த இயலாது எனவும், பக்தர்களின் காணிக்கை மற்றும் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு கோயில் கும்பாபிஷேகத்தையும் தமிழக அரசு நடத்தவில்லை என்றும், கோயிலில் வரும் உண்டியல் வருவாய் தமிழக அரசு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருவதாகவும், திமுக அரசு நடைபெற்று வந்தாலும் சனாதன தர்மத்தை ஏற்காமல் அவர்கள் விருப்பப்படி நடந்து கொள்வதாக பேசினார். 

திமுக மத்திய அரசிடம் நிதிவாங்கிக்கொண்டு விமர்சனம் செய்கிறது 

திமுக அரசு அவர்களின் பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்களை அறிவிக்காமல் இந்தியா முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அரசை விமர்சனம் மட்டுமே செய்து வருவதாகவும், மத்திய அரசு ஒதுக்கீடு செய்த இந்த பட்ஜெட் ஒவ்வொரு திட்டத்திற்கான பட்ஜெட் எனவும், குறிப்பாக கட்டுமான தொழிலுக்கு ஒரு பட்ஜெட், ரயில் துறைக்கு ஒரு பட்ஜெட், வேளாண் துறைக்கு ஒரு பட்ஜெட் என ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டத்திற்கான பட்ஜெட் மத்திய அரசு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு மோடி அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை சரிவர செய்து வருவதாகவும், பல்வேறு நிதிகளை பெற்றுக்கொண்டு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என திமுக அரசு ஒவ்வொரு முறையும் தெரிவித்து வருவது வியப்பாக உள்ளதாகவும், தமிழக அரசு பல்வேறு விதங்களில் மோடி அரசை விமர்சனம் செய்வதை குறிக்கோளாக வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூனியர் அமைச்சர் என்றும், திமுக அரசில் சீனியர் அமைச்சர்கள் பலர் இருந்தாலும், ஜூனியர் அமைச்சரை புகழ்ந்து கொண்டு தான் அமைச்சர்கள் இருப்பதாகவும், குறிப்பாக துணை முதல்வர் பதவிக்கு அவர்கள் கட்சியை சேர்ந்த அடிமட்ட தொண்டர்கள் அல்லது மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை நியமிப்பார்களா என கேள்வி எழுப்பியும், இது மட்டுமல்லாமல் உதயநிதி அவர்களை விட கனிமொழி மூத்தவர் எனவும், அவரை துணை முதல்வராக நியமிக்க திமுக குடும்பம் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.