உலக பிரசித்திபெற்ற கோயிலாகவும், நினைத்தாலே முக்திதரும் திருத்தலமாகும் விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயிலாகும். அண்ணாமலையார் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகள், வெளிமாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அண்ணாமலையாரை தரிசனம் செயது, சிவனே மலையாக காட்சிதரும் அண்ணாமலையார் மலையை சுற்றிலும் உள்ள 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவார்கள் பக்தர்கள். இந்தநிலையில்  அமமுக தலைவர் டிடிவி தினகரன் அவருடைய வீட்டில் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அண்ணாமலையார் கோயிலில் வந்து சாமி தரிசனம்  செய்த பிறகுதான் அனைத்து வேலைகளும் செய்வார். தற்போது அமமுக தலைவர் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியுடன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக அண்ணாமலையார் கோயிலில் வந்து அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை சாமி தரிசனம் செய்தபிறகு தான்  வேட்புமனு தாக்கல் செய்தார்.




 


தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையாரையும், உண்ணாமலை அம்மனையும் வழிபட்டு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சவுக்கு சங்கர் முதலமைச்சரை பற்றியும், காவல்துறை அதிகாரிகளை பற்றியும், காவல்துறை பெண் காவலர்களை பற்றியும், தவறாக பேசியிருப்பது பெரும் குற்றமாகும் அதற்காக அவரை கைது செய்ய செய்திருப்பது சரியான நடவடிக்கையே என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், போதை கலாச்சாரம் அதிகமாக உள்ளதாகவும் ஆளும் கட்சி தரப்பினரே போதை பொருட்களை கடத்துவது பெருகி உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் தேனி தொகுதியில் தான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்.