திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மூன்று நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.


திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் இன்று 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்கள் பராமரிப்புகள் நடக்கிறது. இதையொட்டி கீழ்கண்ட பகுதிகளில் காலை முதல் மதியம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று 22-ஆம் தேதி குபேரன் நகர், கஸ்தம்பாடி, முத்த ரசம் பூண்டி, தென்னகரம், நார்த்தாபூண்டி, சி ஆண்டாபட்டு, நெமிலி, பழைய நெல்லிமேடு, பாலியப்பட்டு, பெருந்துறைப்பட்டு, வாழவச்சனூர், மலப்பாம்பாடி, சூ. பாலியப்பட்டு, நல்லவன் பாளையம், முருகர் பாளையம், கீழ் செட்டிபட்டு, மேல் செட்டிபட்டி, கீழ் வணக்கம் பாடி, ராதாபுரம், சாத்தனூர் அணை குடியிருப்பு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. 


23ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 


அதேபோன்று வரும்  23-ஆம் தேதி ரத்தினா கார்டன், வட ஆண்டாபட்டு, கிருஷ்ணா நகர், வேங்கிக்கால், காவலர் குடியிருப்பு, துரிஞ்சாபுரம், புதூர், அத்திப்பாடி, பேரையாம்பட்டு, ராணாபுரம், மலப்பாம் பாடி, சு. பாலியப்பட்டு, தென் முடியனுர், நெல்லிக்குப்பம், எடத்தனூர், புளியங்குளம், வேடங்குளம், ஆயுதபாபாளையம், மெய்யூர், திருமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. 


24ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 


இதேபோன்று வரும் 24-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதி முத்தரசமுண்டி, தென்னகரம், நார்த்தாம்பூண்டி, கூடலூர், காமன், சீயந்தல், தாதா பட்டு, கண்ணகந்தல், டிகே பாளையம், வீரணம், கொழுந்தபட்டு, மெய்யூர், வாஜ்பாய் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.