அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் காட்பாடியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Continues below advertisement

கூட்டத்திற்கு பின் செய்திகளிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,

 

உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என கேட்டதற்க்கு, முதலில் கையெடுத்து கும்பிட்டவர், பின்னர் துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இது எல்லாரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டிய விஷயம். கூட்டு முயற்சியால் எடுக்கப்பட வேண்டிய விஷயம்.

Continues below advertisement

அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஆய்வு செய்வது ஒரு நாடகம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என கேட்டதற்கு?

நாடகம் என்றால் என்னவென்று எடப்பாடிக்கு தெரியுமா? அதிமுக கட்சிக்குள் நடப்பது தான் நாடகம், கூத்துகாரனுங்க என சிரித்தபடியே பதிலளித்தார்.

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து தீர்ப்பாயம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். இந்த வழக்கில் கர்நாடக அரசிடம் 2 அல்லது 3 தடவை பேசி பார்க்கிறோம். அவசரப்பட்டு நீங்கள் தீர்ப்பாயத்தை அமைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் தான் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயம் அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

 

கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து தீர்ப்பாயம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம் 

காரணம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்ல திட்டம் தான். ஆனால் பிடிவாதக்காரர்களோடு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது முடியாத காரியம். இதுவரை கர்நாடக அரசுடன் 50 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் தீர்ப்பாயத்தை அமைக்க கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் எந்த முடிவும் எட்டாது எனவேதான் தீர்ப்பாயத்தை அமைக்க கேட்டுள்ளோம். முல்லைப் பெரியாறு அணையை நேற்று கண்காணிப்பு குழு ஆய்வு செய்ததில். அதில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்களே என கேட்டதற்கு. எல்லா அணைகளிலும் சிறிதளவு தண்ணீர் கசிவு ஏற்படத்தான் செய்யும். இது ஒரு பிரச்சினையே அல்ல என கூறினார்.