திருவண்ணாமலை நகராட்சி திருக்கோவிலூர் சாலையில் ஆகாஷ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் 35, 36, 37, 38, 39 ஆகிய வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இன்று “மக்களுடன் முதல்வர்” முகாமினை பார்வையிட்டார். இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக 2 நபருக்கு பட்டா வழங்கினார். இதனை தொடர்ந்து போளுர் பேரூராட்சி ராணி மஹால் திருமண மண்டபத்தில் 1 முதல் 6 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் முகாமினையும் பார்வையிட்டார். இன்று பெறப்பட்ட மனுக்களின் தீர்வாக 6 நபர்களுக்கு பட்டா மற்றும் வாரிசு சான்று வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆகியவற்றிற்கான ஆணையினை வழங்கினார். இதனை தொடர்ந்து கண்ணமங்கலம் பேரூராட்சியில் வெங்டேஸ்வரா திருமண மண்டத்தில் 9 முதல் 15 வார்டுகள் உட்பட்ட முகாமினை பார்வையிட்டு இன்று பெறப்பட்ட மனுக்களின் தீர்வாக 14 நபர்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வாக பட்டா மாற்றம் மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


 




 


“மக்களுடன் முதல்வர்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் முகாமினை
பார்வையிட்டு பேசியதாவது:


இந்நிகழ்ச்சியின் நோக்கம் நகர்புறத்தில் உள்ள மக்களின் தனிநபர் கோரிக்கையை நிறைவேற்றுவதாகும். சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை என்ற பொது கோரிக்கை வந்தால் நிதி உள்ளதா என ஆராய்ந்து நிறைவேற்றப்படும். அனைத்து மனுக்களையும் 30 நாட்களில் தீர்க்க வேண்டும் என்பது இந்த முகாமின் நோக்கம். மனு கொடுக்க வரும் மக்களிடம் அரசு துறையினர் அவர்களுக்கு தேவையான பதில்கள் மற்றும் அரசு திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ளவர்கள் பட்டா கேட்டு பல வருடங்களாக மனு கொடுத்து இருப்பார்கள். நீர் நிலைகள் அரசு நிலங்கள் பட்டா வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது என்று எடுத்து கூற வேண்டும். எந்த வில்லங்கமும் இல்லாத இடத்திற்கு பட்டா கொடுக்க முடியும். போளுரில் இந்த முகாம் 3 நாட்கள் நடைபெறும். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுங்கள். மனுவை நிராகரிக்காதீர்கள். தனிநபர் சம்பந்தமாக ஒரு மனு மட்டும் கொடுக்க வேண்டும் என்று இல்லை. தனிநபர் நபர் நிறைய கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம்.


 




மேலும்  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உங்கள் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இந்த மனு கொடுக்கும் முகாம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் எந்த நாட்களில் மனு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொணடு மனு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர்எ.வ.வே.கம்பன் தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியம் இரா.ஸ்ரீதரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன்ரூபவ் உதவி இயக்குநர் (ஊராட்சி) திரு.சுரேஷ் குமார் வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), தனலட்சுமி (ஆரணி) திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்ரூபவ் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.