ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, விளிம்பு நிலையிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க  அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) 18.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரைவையில் (2023-2024)-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத்தொடரில் இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள்.


தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட உதவிடும் வேண்டும் என்பதை பொருட்டு தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும்.


Indian Bank Recruitment:பொறியியல் பட்டதாரியா? அரசு வங்கியில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?





இதன் தொடர்பாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் (மருத்துவம்) நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM-ARISE -Chief Minister’s Adi Dravidar and tRIbal Socio Economic Development Scheme) என்கின்ற பெயரில் 40.00 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும்.


இப்புதிய திட்டத்தின் படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்டத் தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை 30% சதவீதத்திலிருந்து 35% சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக 3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் Indian Bank Recruitment: விளையாட்டு வீரரா? சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?


 





வங்கிக்கு வழங்கவும் மற்றும் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50% விழுக்காடு அல்லது 375,000- இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாகவும் 6% வட்டி மானியத்தினை அரையாண்டிற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து பெற்று ஒத்திவைப்பு காலம் உட்பட முழுவதுமாக திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெறுவதற்கான தகுதிகளின் அடிப்படையில் வழங்கவும் அரசாணை (நிலை) எண். 167 ஆதி(ம)பந (சிஉதி) துறை நாள்.(07.12.2023)–இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது என அரசு செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளார்.இவரு இந்த செய்தி குறிப்பில் தெரிவித்து இருந்தனர். Sonia Gandhi Congress : மாமியார் வழியை பின்பற்றும் சோனியா காந்தி? தெலங்கானாவில் காங்கிரஸ் போட்ட செம்ம பிளான்