தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் குளிருப்பு நிலையம், ஆவின் பாலகம் உள்ளிட்ட பல்வேறு பால் நிலையங்களில் ஆய்வு செய்ய இன்று காலை திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். பின்னர் கீழ்பென்னாத்தூர், வழுத்தலங்குணம், வேங்கிக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆவின் பால் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆவின் பால் மேலாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். குறிப்பாக பால் உற்பத்தி அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் நிறுவனம் லாபகமாக அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 


TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்


தமிழகத்திலேயே பால் உற்பத்தியில் தரம் வாய்ந்த பாலாக உற்பத்தி செய்யும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திகழ்வதாகவும், வேறு எந்த மாவட்டத்திலும் அதிக தரத்துடன், புரதச்சத்தும் நிறைந்த இத்தகைய பாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்து வருவதாகவும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக முதல்வர் செய்து தர உத்தரவிட்டுள்ளதாகவும், அதே போன்று விவசாயிகளின் லாபம் உயர ஆவின் நிறுவனம் போதிய நெறிமுறைகளை கையாள்வதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பால் சொசைட்டி இருப்பதாகவும், ஒவ்வொரு சொசைட்டிக்கும் பால் பரிசோதனை செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசின் சார்பாக செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் குறிப்பாக பட்டியலின சமூகத்தை சார்ந்த மக்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல திட்டங்கள் வாயிலாக மான்யம் வழங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.


“நான் வன்னியராக பிறந்தது என் தவறா? என் சாதி உங்கள் கண்களை உறுத்துகிறதா?- அன்புமணி உருக்கம்..!




திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை


திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டியில்லா கடன் இந்த ஆண்டு அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்திற்கும் பால் கொள்முதல் செய்யும்போது பாலின் தரம், கொழுப்பு சத்து, புரதச்சத்து ஆகியவற்றை கண்டறிந்து பாலை கொள்முதல் செய்ய ஏதுவாக விரைவில் கருவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும், தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு அனைத்து தனியார் கம்பெனிகளும் பால் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் அதிக சத்துடன்கூடிய மாட்டு தீவனங்களை ஆவின் தயாரித்து விற்பனை செய்கிறது அதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றார்.


ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.