திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் 3076 பயனாளிகளுக்கு கட்டிமுடிக்கப்பட்ட 8 புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூபாய் 12 கோடியே 29 இலட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் செங்கம்
சட்டமன்ற உறுப்பினர்கள்  மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் மாநில உடனிருந்தனர். இன்று வழங்கிய நலத்திட்ட உதவிகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பட்டா மாற்றம் வருவாய் சான்றிதழ்கள், முதியோர் மற்றும் இதர மாதாந்திர உதவிதொகைகள், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை திருமண உதவித்தொகை விபத்து நிவாரண நிதி எஸ்டி சாதிச் சான்றுகள் என 444 பயனாளிகளுக்கு ரூபாய் 63 இலட்சத்தி 64 ஆயிரம் மதிப்பீட்டிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பழங்குடியினருக்கான புதிய வீடுகளுக்கான அனுமதி ஆணை வழங்கினார்.




பொதுப்பணித்துறை  துறை அமைச்சர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:


தமிழ்நாடு முதலமைச்சர் அனைவருக்கும் சமமான சமஉரிமை வழங்கும் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வானாபுரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை,பள்ளிக்கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டி, பள்ளி நூலக கட்டிடம், பேவர் ப்ளாக் சாலை, பள்ளிகளில் சத்துணவு கூடம் என ஏறத்தாழ 86 பணிகளுக்கு ரூபாய் 8 கோடியே 46 இலட்சத்தில் செலவு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான ஆட்சியில் சென்னை மேயராகவும், உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என்று பல்வேறு பதவிகளில் செயலாற்றிய அனுபவத்தினால் மக்களுக்கு தேவையான திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்று அறிந்து செயல்படுத்தி சிறப்பான ஆட்சியை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களின் முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


 




அதில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் மகளிர் சுய உதவிகுழுக்களின் கடனுதவி, அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், குடும்ப தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், அரசின் முக்கியமான 18 துறைகளின் சேவைகளை மக்கள் ஓரே இடத்தில் பெறுவதற்கான மக்களுடன் முதல்வர் முகாம் திட்டம், மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி  துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.