என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்தவாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியாக சென்று பழைய பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். பின்பு பேருந்து நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார்.
அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்து உள்ளனர். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் வேலைக்கேற்ற ஊதியம் படிப்புக்கு ஏற்ற வேலை என்ற எண்ணத்தில் இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். இளைஞர்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் தற்பொழுது உள்ள ஆட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும், ஆனால் குடும்பத்திற்கான அரசாக உள்ளது. அவர்களுடைய குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்திலும் திமுக ஆட்சி உள்ளது.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம்
மேல்மா பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் அமைப்பதற்கு எங்களுடைய நிலத்தை தர மாட்டோம் என விவசாயிகள் போராடியவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. அதன் பிறகு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்த பின்னரே குண்டாஸ் வாபஸ் பெறப்பட்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் குறித்து மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டபோது விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் பற்றி எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இன்னும் 2 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது திமுக குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். இந்தியாவின் வலிமைக்காகவும் இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் உலக அளவில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. தற்போது பாஜக ஆட்சி 9 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இழந்த கலாச்சாரத்தை பாஜக மீட்டு வருகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சத்து 971 வீடுகளுக்கு பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் பழுப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் 81 பேருக்கு வீடுகளுக்கு பாரத பிரதமரின் இலவச கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபோது 64 சதவீத மக்களிடம் கேஸ் அடுப்பு இருந்தது. பாஜக ஆட்சிக்குப் பிறகு 3 லட்சத்து 2231 குடும்பங்களுக்கு இலவச இணைப்பு கொடுக்கப்பட்டு 300 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் மானியமாக செலுத்தப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் விவசாய கௌரவ நிதி ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் 4, லட்சம் 75 ஆயிரம் பேருக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மோடி ஆட்சியின் பிறகு வலுவாக உள்ளது என்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு இழந்த கலாச்சாரத்தை தற்போது பாஜக மீட்டு வருவதாகவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ராமர் கோவில் கட்டினால் பாஜகவிற்கு ஓட்டு போட்டு விடுவார்களா என்று அரசியல்வாதிகள் பேசுகின்றனர் என்றும், ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு முதலாவதாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு பத்திரிகை அழைப்பு கொடுத்தது.
பாஜக, இஸ்லாமிய மக்களுக்கு மசூதி கட்டி வருகிறது
தற்போது அப்பகுதி பாஜக, இஸ்லாமிய மக்களுக்கு மசூதி கட்டி வருவதாகவும், உண்மையான சமூக நீதி என்றால் என்ன டெல்லியில் உள்ள பணம் வைத்து உள்ளவர்களுக்கு பத்ம பூசண், பாரத ரத்னா, பத்மா விருது கொடுத்ததல்ல தற்போது மோடி ஆட்சி வந்த பிறகு அடித்தட்ட மக்களுக்கும் உண்மையாக உழைப்பவர்களுக்கும் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டு வருவதாகவும், மோடி தற்போது அரசியலை மாற்றிவிட்டார் ஏழை எளிய மக்களை நோக்கி அரசியல் வந்து கொண்டிருக்கிறது. மோடியை எதிர்த்து இந்தியாவில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் உள்ளார்களா, இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு பாரதப் பிரதமர் பதவிக்கு எங்களுக்கு மோடி வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். அவர் கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் யாராவது அந்த பதவிக்கு தகுதி வாய்ந்த தலைவராக உள்ளார்களா அந்த பதவிக்கு தகுதி உள்ளவர்கள் யாரும் கூட்டணியில் இல்லை. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தேர்தல் குறித்து பேசுவதற்கு மட்டுமே வெளியில் வருகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்களா என்பதே தெரியவில்லை. அரூரில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் நடத்தி காங்கிரஸ் எம்பி ஜோதி மணிக்கு சீட்டு கொடுக்காதீர்கள் என்றும், அதேபோன்று கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட்டு கொடுக்காதீர்கள் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் தான் இருக்கிறார்கள் தொண்டர்கள் அனைவரும் கட்சியை விட்டு சென்று விட்டனர் என்றும்.
மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு விவசாயிகளிடம் கொடுக்காமல் மாநில அரசு ஏமாற்றுகிறது
ஆரணி பாராளுமன்ற காங்கிரஸ் எம்பியும் சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வெளியில் வந்தார். தற்பொழுது தேர்தல் நடக்க இருக்கிறது தற்போது வெளியில் வருகிறார் என்றும், ஆரணி பாராளுமன்ற தொகுதியில் பாரதி ஜனதா கட்சி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் வந்தவாசி கோட்டையை சுற்றுலா தலமாக மாற்றுவோம் என்றும் வந்தவாசி கோரை பாய்க்கு புவிசார் குறியீடு கொண்டு வருவோம் என்றும் தூத்துக்குடியில் தொடர்ந்து விவசாயிகள் பயிர் காப்பீடு வரவில்லை என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். 2022,23 பயிர் காப்பீட்டு தொகையை மத்திய அரசு 663 கோடி மாநில அரசிடம் கொடுத்துவிட்டோம் என்று கூறியுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு விவசாயிகளிடம் கொடுக்காமல் மாநில அரசு உள்ளது. மத்திய அரசு அளிக்கக்கூடிய அனைத்து திட்டங்களுக்கு மாநில அரசு பெயர் மாற்றி திட்டங்களை அறிவிப்பதாகவும் வந்தவாசி செய்யார் பகுதியில் ஏபிஆர் என்ற தனியார் நிதி நிறுவணம் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஏழை பொதுமக்களை ஏமாற்றி விட்டார்கள். நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு தமிழக டிஜிபி இடம் பாஜக சார்பாக வழக்கு தொடுத்து பறிகொடுத்த பணத்தை மீட்டு தர பாஜக செயல்படும் என்று தெரிவித்தார்..