நாடு முழுவதும் இன்று இந்திய திருநாட்டின் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக கொண்டாப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட வளாகத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.


தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இருவரும் திறந்த வெளி வாகனத்தில் ஏறி துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பார்வையிட்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகரன் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஏற்றுக்கொண்டார். பின்னர் காவல்துறை, வருவாய் துறை, சுகாதார துறை, கல்வித்துறை, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 350 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் விருதுகள் மற்றும் மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.




நலத்திட்ட உதவிகள் 


மேலும் வருவாய்த் துறையின் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா பட்டா மாறுதல் மற்றும் முதியோர் உதவித்தொகை வேளாண்துறை சார்பாக கரும்பு அறுவடை இயந்திரம் உளுந்து வம்பன் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் பண்ணை கருவிகள் பிரதம மந்திரியின் நுண்ணுயிர் பாசன திட்டம் தெளிப்பு நீர் பாசன கருவிகள், துணை இயக்குனர் தோட்டக்கலைத் துறை சார்பாக மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் நிழல்  குடில் அமைத்தல், மாவட்ட தொழில் மையம் மூலமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டம், உதவி ஆணையர் கலால் மூலமாக கறவை மாடு, சமூக நலத்துறையின் மூலமாக முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட 391 பயனாளிகளுக்கு 1கோடியே 80 ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.


பின்னர் மாணவர் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட முழுவதும் பல்வேறு அரசு மற்றும் பள்ளி கல்லூரிகள் என பல இடங்களில் நடைபெற்றது. அதில் அதிகாரிகள் கொடியேற்றி வைத்து கொண்டாடினர். திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தேசிய கொடியை ஏற்றினார். வட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேர் பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளர் சண்முகம் தேசிய கொடியை ஏற்றினார். உதவி செயற்பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி தேசிய கொடியை ஏற்றினார். இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.