TVK: கோஷ்டி மோதலில் தமிழக வெற்றி கழகம் - விஜய் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

. தமிழக வெற்றிக் கழகத்தில் இப்போதே கோஷ்டி மோதல் வெடித்து வருகிறது. இதில் விஜய் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

Continues below advertisement

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் எம்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (44 ). இவர், நடிகர் விஜயின் ரசிகர் மன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து தற்போது தமிழக வெற்றிக் கழக குடியாத்தம் ஒன்றிய தலைவராக உள்ளார். இவருக்கும் அதேபோன்று, குடியாத்தம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள CM.செல்வம் என்பவருக்கும் இடையே "GOAT" படத்தின் போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து மண்டை உடைப்பு சம்பவமாக மாறி இருக்கிறது. கடந்த 10-ம் தேதி அன்று, ’GOAT’ படத்தின் போஸ்டர்கள் குடியாத்தம் நகரில் ஓடக்கூடிய ஆட்டோக்களில் சில வாலிபர்கள் ஒட்டியுள்ளனர். அதில், குடியாத்தம் ஒன்றிய தலைமை என வேறு ஒருவரின் போன் நம்பர் பதிவிடப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கலைச்செல்வம் அந்த வாலிபர்களிடம் சென்று தமிழக வெற்றி கழக குடியாத்தம் ஒன்றிய தலைவராக நான் பதவி வகித்து வருகிறேன். எனக்கே தெரியாமல் குடியாத்தம் ஒன்றிய பதவியில் யார் இருப்பது என கேட்டுள்ளார். அப்போது, அந்த வாலிபர்கள் செயற்குழு உறுப்பினராக உள்ள CM.செல்வம் தான் ஒட்டச் சொன்னார். இது, மாவட்டத் தலைவர் உத்தரவாம் என பதில் அளித்துள்ளனர்.

Continues below advertisement


விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆட்டோவில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் தகராறு

இதனால் கோபமடைந்த கலைச்செல்வன், CM செல்வத்திடம் சென்று கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து CM செல்வத்தின் கோஷ்டி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட மோதல், கத்திக் குத்தாக மாறி கொலை வெறி தாக்குதல் நடந்து இருக்கிறது. இதில் கலைச்செல்வன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இருச் சக்கர வாகனங்கள் மீதும், வீட்டின் ஜன்னல்களை உடைத்தும் கலைச்செல்வனின் மகன் தலையில் வெட்டிவிட்டு சென்றுள்ளனர் CM செல்வம் தரப்பினர். இதில், ஆத்திரமடைந்த கலைச் சென்வன் தரப்பு பதில் தாக்குதல் நடத்தியதில் விஜய் என்ற வாலிபருக்கு கத்தி வெட்டு விழுந்துள்ளது. இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார் ஒன்றிய தலைவர் கலைச்செல்வனின் குடும்பத்தை கூண்டோடு தூக்கி சிறையில் அடைத்தது. ஆனால் மற்றொரு தரப்பை கைது செய்யாமல் விட்டுவிட்டது. இந்த நிலையில் இந்த கோஸ்டி மோதல் சம்பவத்திற்கு பின்னணியில், முழுக்க முழுக்க வேலூர் மாவட்டத் தலைவர் வேல் முருகன் இருப்பதாக சொல்லப்படுகிறது. வேல் முருகனுக்கும், கலைச் செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடின் காரணமாக கலைச் செல்வத்திற்கு எதிராக செயல்பட CM செல்வத்தை உருவாக்கிய மாவட்டத் தலைவர் வேல்முருகன், கலைச் செல்வனுக்கு எதிராக செயல்பட வைத்துள்ளார்.


விஜய் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் 

இதனால், ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர். இது சம்பந்தமாக புஸ்ஸி ஆனந்த் வரை இரு தரப்பும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளாததால் இப்போது கத்தி குத்துவரை சென்றுள்ளது. இதன் பின்புலத்தில் முழுக்க முழுக்க மாவட்ட தலைவர் வேல் முருகன் இருக்கிறார் என்றும், இரு தரப்பு மோதலில் எங்கள் தரப்பை மட்டும் ரிமாண்ட் செய்து இருக்கிறது குடியாத்தம் போலீஸ். மற்றொரு தரப்பை கைது செய்யாமல் விட்டுவிட்டது அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார் கலைச் செல்வன் மனைவி உஷா ராணி. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மாவட்டத் தலைவர் வேல் முருகன் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் உஷா ராணி. தமிழக வெற்றிக் கழகத்தில் இப்போதே கோஷ்டி மோதல் வெடித்து வருகிறது. இதில் விஜய் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola