திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திருவண்ணாமலை நகர போக்குவரத்து சீரமைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி தலைமையில் நகர போக்குவரத்து சீரமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் குழு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைதலைவர்  கு.பிச்சாண்டி பேசியதாவது:
இதற்கு முன்பு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  தலைமையில் போக்குவரத்து முறைப்படுத்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் முதல் குழு கூட்டம் நடைபெற்றது.


 


 




அக்கூட்டத்தில் போக்குவரத்து நெறிமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதில் முதல்கட்டமாக மருத்துவக்கல்லூரி அருகில் உள்ள காலியிடத்தை வேலி அமைத்து அதில் வாகனத்தை நிறுத்தம் செய்யலாம். கிராம ஊராட்சிகளில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த இடங்களை எல்லாம் கிராம கோவில் அதிகாரிகள் மீட்டு வாகன நிறுத்தங்களாக பயன்படுத்திகொள்ள பரிந்துரை செய்யலாம். காந்தி நகர் பைபாஸில் உள்ள ஒரு சில இடங்களை தவிர்த்து ரூபவ் மற்ற குத்தகை இடங்களை மீட்டு வாகனம் நிறுத்துமிடமாகவும் மற்றும் அந்த இடங்களை தெரிந்துகொண்டு வெளியிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தவும் பயன்படுத்திகொள்ளலாம்.
மேலும் கோவில் அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை நிரந்தரமாக வாங்கி நிறுத்துமிடங்கள் அமைக்க அமைச்சரிடம்  பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேருந்து  உரிமையாளர்கள் மற்றும்  லாட்ஜ் உரிமையாளர்கள் இணைந்து தனிப்பட்ட முறையில் இடங்கள் வாங்கி லாட்ஜ்க்கு வருகிற வாகனங்களை நிறுத்துமிடங்களாக பயன்படுத்தி கொள்வதன் மூலம் போக்குவரத்தை முறைப்படுத்தலாம் என முதற்கட்டமாக பரிந்துரைக்கப்பட்டது.


 




 


பே கோபுரத்தின் மேற்கிலிருந்து பேருந்து நிலையம் செல்கிற சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். மணலூர்பேட்டை சாலையிலிருந்து திருக்கோவிலூர் செல்கிற வழியில் உட்புற சாலைகள் உள்ளன. அந்த உட்புற சாலைகள் எல்லாம் பார்த்து அதன் வழியாக வண்டிகளை திருப்பிவிடுவதன் மூலம் போக்குவரத்தை சீரமைக்கலாம் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி  பேசினார். மேலும் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அனைத்து வியபாரிகள் சங்க பிரதிநிதிகள், ஒட்டல்
உரிமையாளர்கள், ஆட்டோ ஒட்டுநர் சங்கம், தனியார் பேருந்து  சங்க பிரதிநிதிகள் நகரமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலை துறை, தமிழ்நாடு போக்குவரத்துறை, நகராட்சித் துறை, காவல் துறை, இந்து சமய அறநிலை துறை வட்டரா போக்குவரத்துறை சார்ந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை குழுத்தலைவரிடம்  தெரிவித்தனர். அடுத்த குழு கூட்டம் (23.01.2024) அன்று நடைபெறும்.