திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான நேரடி கொள் முதல் நிலையங்கள் (10.01.2024 )முதல் துவக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24 ஆண்டிற்க்கான சம்பா பருவத்தில் முதல் கட்டமாக 11 வட்டங்களில் 58 மையங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (10.01.2024) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு (08.01.2024) முதல் துவங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்வரும் விவரப்படி 58 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.  திருவண்ணாமலை வட்டத்தில் நார்த்தாம்பூண்டி, வெளுக்கானந்தல், பெரியகிளாம்பாடி, கருத்துவாம்பாடி, கீழ்பென்னாத்தூர் வட்டத்தில்; சோமாசிபாடி, அணுக்குமலை, செங்கம் வட்டத்தில்; கண்ணக்குருக்கை, அன்வராபாத், காரியமங்கலம், எறையூர், மேல்முடியனூர், நாகபாடி, அரட்டாவடி, தண்டராம்பம்டு வட்டத்தில் ; தண்டராம்பம்டு, மேல்கரிப்பூர், ராயண்டபுரம், ஆரணி வட்டத்தில்; அரியாபாடி, தச்சூர் 5-புதூர்




போளூர் வட்டத்தில்; மண்டகொளத்தூர், வடமாதிமங்கலம், குன்னத்தூர்,  கேளுர், எடப்பிறை , கலசப்பாக்கம் வட்டத்தில்; எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி, வீரலூர், வந்தவாசி வட்டத்தில்; வல்லம், நல்லூர், தென்னாத்தூர், பொன்னூர், மலையூர், மருதாடு, எரமலூர், பெரணமல்லூர் செய்யாறு வட்டத்தில்; எச்சூர், பாராசூர், மேல்சீசமங்கலம், தவசிமேடு, ஆக்கூர், மேல்மா, வெங்கோடு, பெருங்களத்தூர், வெம்பாக்கம் வட்டத்தில்; வெம்பாக்கம், கீழ்நெல்லி, தூசி, பெருங்கட்டூர்,
அழிவிடைத்தாங்கி, தென்னம்பட்டு, நாட்டேரி, அரியூர், பிரம்மதேசம், சேத்துப்பட்டு வட்டத்தில்; சேத்துப்பட்டு , நம்பேடு, பெரியகொழப்பலூர், மேல்சாத்தமங்கலம், செம்மாம்பாடி ஆகிய இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்
விற்பனை செய்து பயன் பெறலாம்.


(08.01.2024) முதல் முன்பதிவு துவங்கும்  



  • விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும் உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினைஅடங்கலில் பெறவேண்டும்.


 



  • நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடிகொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ளது.  நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.


 



  • நேரடிநெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்மந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு“ வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது” என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.


 



  • பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரின்  DASH BOARD -க்கு அனுப்பப்பட்டு அவரால் பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் நிராகரிப்பு செய்யப்படும்.


 



  • ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும்.


 



  • விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம் சான்றுகள் பெறுதல் நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது WHATSAPP வாயிலாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரிசெய்யப்படும்.



எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.