ஆந்திர மாநில தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என ஆந்திரா வேளாண்மை துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்வதற்காக

  நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து இரவு கிரிவலம் மேற்கொண்டார்.


சாமி தரிசனம்


அப்போது கிரிவலம் சுற்றிய ரோஜாவிடம் செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும்  இன்று காலையில்  அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக அண்ணாமலையார் சன்னதியில் உள்ள சம்மந்த விநாயகரை தரிசனம் செய்து பின்பு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை‌ தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 


 




பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஜா பேசியதாவது:


ஒவ்வொரு ஆண்டும் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கு வருவேன். அதேபோன்று இந்த வருடமும் கிரிவலம் வந்து அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை சாமி தரிசனம் செய்துள்ளேன். இது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. அண்ணாமலையார் உண்ணாமலையுடைய அருள் எனக்கு இருக்க வேண்டும். இதன் மூலமாக  பொதுமக்களுக்கு நான் நல்லது செய்யவேண்டும் என்று நான் வேண்டியிருக்கிறேன். எங்களுடைய தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இரண்டாவது முறையாக முதல்வர் ஆகவேண்டும் என மனப்பூர்வமாக வேண்டியுள்ளேன். நான் மூன்றவாது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை வேண்டியுள்ளேன். பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார்.


தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்கணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை உட்பட அனைவரையும் பணியிட மாற்றம் செய்வது, அவர்கள் மீது விசாரணை அமைப்பது என அதிகாரிகளுக்கு அதிகளவில் மனஉளைச்சலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தெளிவாக உள்ளனர், யார் ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்துள்ளார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், அதனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளதால் வெற்றி எங்களுக்கே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.