திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 


எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:


அதிமுக பொதுசெயலாளர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட வலியுறுத்தினார். ஆனால் மாவட்டம் சார்பாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட செயலாளர் ஜெயசுதா என்னை வேண்டுமென்றே சில நிர்வாகிகளை வைத்து விளம்பரம், செய்தித்தாள், துண்டு பிரசுரம் ஆகியவற்றில் என் படத்தை போடாமல் என்னை புறக்கணித்து வருகின்றார். 5 மாதம் முன்பு நியமிக்கபட்ட மாவட்ட செயலாளர் ஆரணியில் உள்ள சில நிர்வாகிகளை என்படத்தை போட கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால் கிளை செயலாளர்கள் என் படத்தை போட்டுள்ளனர். 


 




மாவட்ட செயலாளர் ஜெயசுதாவை கண்டித்த முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 


மாவட்ட செயலாளர் சில நிர்வாகிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு எம்.எல்.ஏவை ( என்னை ) இருட்டடிப்பு செய்து வருகின்றார். 2 முறை எம்.எல்.ஏவாக உள்ள நான் மக்கள் மன்றத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்து வைக்கின்றேன். மக்களே தீர்ப்பு அளியுங்கள் எந்த இழப்பு வந்தாலும் உங்களை விட்டு பிரியமாட்டேன் நான் அதிமுகவில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். 5 வருடம் இந்து சமய அறநிலை துறை அமைச்சராகவும் 2 முறை எம்.எல். ஏவாகவும் 3 முறை உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றேன். 17லட்சம் தொண்டர் கொண்ட இந்த இயக்கத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1கோடி 50லட்சம் தொண்டர்கள் உருவாக்கியதை எடப்பாடி பழனிசாமி 2கோடி 40லட்சம் தொண்டர்கள் உருவாக்கிய வரும் அப்படிபட்ட இயக்கத்தில் மாவட்ட செயலாளர் எதற்கும் செவிசாய்க்காமல் துண்டு பிரசுரங்களும் பேனரிலும் என்னை வேண்டுமென்றே புறக்கணித்து வரும் மாவட்ட செயலாளர் ஜெயசுதாவை கண்டிக்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.




மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஓழிக ஓழிக என  கோஷமிட்ட தொண்டர்கள் 


இதனையொடுத்து பொதுகூட்டத்தில் பேச்சை முடித்து மேடையில் இருந்த உடனடியாக முன்னாள் அமைச்சர் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் இறங்கி வந்தார். அப்போது எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் திடீரென எம்.எல்.ஏவை சூழ்ந்து கொண்டு எம்.எல்.ஏ வாழ்க வாழ்க எனவும், மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஓழிக ஓழிக என கூறி கோஷமீட்டு மேடையிலிருந்து ஊர்வலமாக சிறிது தூரம் ஊர்வலமாக சென்றார்.  இதனால் பொதுகூட்டத்தில் சிறிது நேரம் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கட்சி தொண்டர்கள் மத்தியிலும் கட்சி நிர்வாகிகள் இடத்தில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.