Indian Bank Recruitment:  நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான விளையாட்டு கோட்டாவில் உதவியாளர்கள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் வங்கிகளில் பணிபுரிய  காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டு மூலம் உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்கு விண்ணப்பிக்க அடுத்தமாதம் 5-ஆம் தேதி கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.


பணி விவரம்:


அதிகாரி


உதவியாளர் 


(கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, கைப்பந்து (Setter,Attacker or Blocker))


பணி இடம்:


இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னை அல்லது மாநிலங்களில் உள்ள மற்ற இந்தியன் வங்கி கிளைகளில் நியமிக்கப்படுவர்.


கல்வித் தகுதி:


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.


கிரிக்கெட் விளையாடுபவர்கள் இந்திய அணி அல்லது ராஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.


வயது வரம்பு:


உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் 26 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஊதிய விவரம்


Officer JMG Scale I – ரூ.36000 -1490/7 – 46430 – 1740/2 – 49910 - 1990/7 – 63840


Clerk  ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42660-3270/1-45930-1990/1-
47920 (20 ஆண்டுகள்)


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு 'Trails' (விளையாட்டுப் போட்டி), நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


நேர்காணல், குழு விவாதம் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையத்தளத்தில் Recruitment of Sports Persons – 2023  என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பம் கட்டணம்:


இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.700 செலுத்த வேண்டும். 


பட்டியலின/பழங்குடியின பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்ப தொகை ஜி.எஸ்.டி-யுடன் செலுத்த வேண்டும்.


கவனிக்க..


விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது. 


நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதிகாரி பணிக்கு 2 ஆண்டுகள் PROBATION  காலம், உதவியாளர் பணிக்கு 6 மாதங்கள் PROBATION காலம் கொடுக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், பணி இடம் ஆகியவற்றில் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.


 முகவரி:


General Manager (CDO), Indian Bank


Corporate Office, HRM Department, Recruitment Section


254-260, Avvai Shanmugham Salai,


Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.


விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.09.2023