1. கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் திடீரென சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது ,அரசியலுக்கு வந்ததால் என்னையே இந்த பாடுபடுத்துகிறார்களே, நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தால் அவரை தற்கொலைக்கே தள்ளி இருப்பார்கள், நல்லவேலை தப்பித்து விட்டார்   என்று பேசினார்




2. ஓராண்டுக்கு முன்பு வல்லநாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியைப் பிடிக்கச் சென்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் நடந்தது. அதனால் தென் மாவட்டங்களில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதாகச் சர்ச்சைகள் கிளம்பின. இந்த நிலையில், நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட தச்சநல்லூர் காவல் நிலைய வாசலில் வெடிகுண்டு வீசப்பட்டதுதேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான கண்ணபிரான் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்  தச்சநல்லூர் காவல் நிலயத்தில் கையெழுத்திட சென்ற போது பிப் 7-ஆம் தேதி ஸ்டேஷனுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். காவல் நிலைய வாசலில் விழுந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியது, வெடிகுண்டு வீசிய இரண்டு இளைஞர்கள் பைக்கில் செல்லும் காட்சி சிசிடிவி மூலம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.




3. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஏப்ரல் 22-ஆம் தேதி கைதிகளுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் விசாரணைக் கைதி முத்து மனோ என்பவர் உயிரிழந்தார்.  இரு பிரிவு சமூகத்தினரிடையே சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது, முத்துமனோவின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் 73 நாட்களுக்கு பின் உடலை பெற்றுக் கொண்டனர். நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரக்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவரது நண்பர்கள் சிலர் உடல் மீது அரிவாளை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன், அவரது மரணத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்வதாகவும் சபதம் ஏற்றுக் கொண்டார்கள். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,




4. கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாநகரில் தொடர்ச்சியாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது, குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் அதிமுகவினர் செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாகவே தேர்தலில் தோற்றுப்போனோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒட்டப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும் அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்டது.


5. நெல்லை கேடிசி நகர் அருகே ஜூலை 20  ஆம் தேதி தனது இரண்டு மகள்களால்  தாய் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டதாரி பெண்களான இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் அவர்களை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்த போது வர மறுத்த  நிலையில் இருவரும் விஜய் பாடல்கள் பாடி உள்ளனர். விஜய் ரசிகர்களான இருவரையும் நடிகர் விஜய்யை பார்க்க அழைத்து செல்வதாகவும், சாப்பிட பர்கர் வாங்கி தருவதாகவும்  கூறி அழைத்து சென்றனர்.  இச்சம்பவம் நெல்லை  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது,





6. அவன் இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார்  கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்து திரைப்படம் வெளியானதாக தொடரப்பட்ட வழக்கு அம்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்டு 19 ஆம் தேதி அவதூறு வழக்கிலிருந்து இயக்குனர் பாலாவை விடுவிப்பு செய்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் கார்த்திகேயன்  உத்தரவிட்டார்.





7. நெல்லை மாவட்டம் கேடிசி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான பெரியராஜா (36) என்பவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இவர் அரசுக்கு உரிய வணிக வரி செலுத்தாமல் ஒன்பது கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக நெல்லை வணிக வரித்துறை அதிகாரிகள் பெரியராஜாவை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார் இதையடுத்து பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு தலைமை மருத்துவமனையில் வணிகவரி அதிகாரிகள் அவரை சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


8. நெல்லை டவுன் சாலியர் தெருவில் உள்ள வீடு ஒன்றில் பழமையான ஐம்பொன் சிலை இருப்பதாக  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆகஸ்டு 2 ஆம் தேதி கோவிந்தன் (74) என்பவருடைய வீட்டில் சோதனையிட்டபோது, பூஜை அறையில் இருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலையை மீட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலை 2 அடி உயரம் 11 கிலோ எடை கொண்டதாகும். மேலும் இந்த சிலை 18ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும்  இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நெல்லையில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


9. தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் ஆகியோர் அக்டோபர் 20 ஆம் தேதி பொறுப்பேற்றனர்., இந்த நிலையில் தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவியாக நெல்லையை சேர்ந்த 90 வய து மூதாட்டி பெருமாத்தாள் பதவி ஏற்றார்.  அதாவது நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.  மொத்தம் 2060 வாக்குகள் பதிவான நிலையில் 1568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார், இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது, மூதாட்டிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்தது,




10. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரை தாக்கிய திமுக எம்பியை கைது செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அக்டோபர் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்த பிறகும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதாக அறிவித்த அவர் இரவிலும் காவல் நிலையத்திற்குள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து பொன்ராதாகிருஷ்ணன் உள்ளே வெறும் தரையில் படுத்து உறங்கினார். காலையில் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார். 




11. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பழனி (55). இவரது மனைவி முத்துலட்சுமி கடந்த சில  மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனை அடுத்து, தனது மகன் சுதாகரனுடன் நெல்லை சந்திப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் பழனி வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி எஸ்எஸ்ஐ பழனி, வீட்டில் விஷம் குடித்து உயிரிழந்தார்.. இந்த சம்பவத்தில், உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த பழனி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறப்புக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது..





12. நெல்லை மாநகர காவல்துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மகேஸ்வரி  கடந்த நவம்பர் 7 தேதி திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார், பணிச்சுமை காரணமாகவும் உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவும் மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்ற மகேஸ்வரி தந்தை இறந்த சூழலிலும் ஏற்றுக்கொண்ட கடமை தவறாது சுதந்திர தின விழாவில் வீர வாள் சுழற்றி காவலர் அணிவகுப்பை திறம்பட நடத்தினார், நாடெங்கும் இவருக்கு பாராட்டு குவிந்தது,  அதே போல் கடந்த ஆண்டு இந்த சம்பவத்தின் போது  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பாராட்டினார், இந்த சூழலில் இந்தாண்டு அந்த பெண் காவல் ஆய்வாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நெல்லை மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.




13. கடந்த 17ஆம் தேதி நெல்லை டவுண் சாப்டர் பள்ளியில் இடைவேளையின்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர், 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம் கழிப்பறை சுவரின் அடித்தளம் சரியாக இல்லாதததே என பலரும் குற்றம் சாட்டினர், மேலும் இது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு  விசாரணையும் நடைபெற்று வருகிறது.  தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதே போல பள்ளியின் உறுதித்தன்மை குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின,. இந்த நிலையில் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் இருந்த தலைமை ஆசிரியர் உட்பட  3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி  நெல்லை நீதிமன்றம்  உத்தரவிட்டது,  இருந்தார், இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு  எடுத்தது. உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கியதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்யவும், சேதமடைந்த பள்ளிகளை இடிக்கவும் உத்தரவிட்டு முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.




 


14. கடந்த ஆண்டு ஏப்ரல் 2–ஆம் தேதி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில், தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என பேசியிருந்தார். இது குறித்து நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி போலீசார் இவ்வழக்கில் மாரிதாஸை கைது செய்தனர். பின்னர், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  மாரிதாஸை டிசம்பர் 30 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது,  இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் மீது வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. மாரிதாஸ் இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாகும் வகையிலோ அல்லது அதனை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டது.