சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்பொழுது, "இந்த மண்ணிற்காக உயிர் நீத்த  தியாகிகள் மனதில் என்னென்ன நினைத்து இந்தியா வர வேண்டும் என்று நினைத்தார்களோ அதே எண்ணத்தோடு, லட்சியத்தோடு எதிர்கால இந்தியா, வலிமையான இந்தியா, வல்லரசு இந்தியாவை உருவாக்கி கொண்டிருக்கும் பாரத பிரதமர் மோடியின் எண்ணமும் செயலும் சுதந்திர போராட்ட தியாகிகளை கெளரவிப்பது, அவர்கள் எண்ணங்களை ஈடேற்றுவது தான் பாஜகவின் லட்சியம்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "அரசாங்கத்திற்கு வருமானம் வருவது என்பது கணக்கில்லை, அதனால் எத்தனை பேர் நலன் பாதுகாக்கப்படுகிறது என்பது தான் முக்கியம், எங்களை பொறுத்தவரை எல்லா மதுக்கடைகளையும் மூட வேண்டும்


கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதுதான்,  ஆனால் இந்த முறை மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று 500 கடைகளை அதுவும் பல்வேறு விஷ சாராய உயிரிழப்புகளுக்கு பின்னால் 500 டாஸ்மாக் கடைகளை குறைத்துள்ளார்கள். மதுக்கடைகளின் நேரங்களையும் குறைக்க வேண்டும்" என்றார். மேலும் "தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக எடுக்க வேண்டும் என்பதையே பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது" என்றும் தெரிவித்தார்.


"வார்த்தைகளை பயன்படுத்துவது அவரவர் தரத்தை பொறுத்தது. ஆளுநர் அவருக்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் அவருக்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அவருக்கு விருப்பமில்லை  என்றால்  அல்லது ஒத்து வரவில்லை என்று சொன்னால் எப்படி கடிதம் எழுதுவது என்ற முறை இருக்கிறது. ஆளுநரின் செயல்பாட்டில் எந்த விதமான குந்தகம் விளைவிக்கும் வார்த்தைகளும் இல்லை. ஆளுநர் முதலீகளை பற்றி சொன்னால் தவறு இல்லை, முதலமைச்சரை பற்றி குறிப்பிட்டு சொன்னால் தானே தவறு.  ஒரு நாட்டின் முதலீடு இவ்வளவு வந்திருக்கிறது என்று சொல்வதில் தவறு இல்லை" என்றார்.


"கண்டிப்பாக பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். பொது சிவில் சட்டம் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை. தற்போதைய சட்டம் தவறானது, யார் எழுதியிருந்தாலும் தவறானது. பொதுமக்கள் பிரச்சனை சம்பந்தமாக எப்போது வேண்டுமானாலும் முதலமைச்சரை சந்திக்கலாம், அவர் நேரம் கொடுத்தால் சந்திப்போம். ஆட்சியை கலைப்போம் என்று யாரும் சொல்லவில்லை,  ஆட்சி கலைத்தாலும் பரவாயில்லை என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டிய தேவை இல்லை. செந்தில் பாலாஜி பிரச்சனை நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். காவல்துறையினருக்கு, அதிகாரிகளுக்கும் அதிக மன அழுத்தம் இருக்கிறது.. டிஐஜி தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அது சரியான நடைமுறை இல்லை. காவல்துறைக்கு முழு அதிகாரம் கொடுத்து சுதந்திரமாக செயல்பட தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மகளிருக்கு பஸ் விடுவோம் என்று சொன்னார்கள், ஆனால் பேருந்துகள் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னவென்றால்ம்மகளிர் உரிமைத்தொகை ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆனால் கொடுக்கவில்லை. அண்ணா பிறந்த நாளிலிருந்து கொடுப்போம் என்று சட்டமன்றத்தில் சொல்லப்பட்டது, அதுவும் சொல்லி நான்கு மாதம் ஆகிவிட்டது. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அது அனைவருக்கும் இல்லாமல் பெயரளவில் இருக்கும் என்றே நினைக்கிறேன். அதுவும் பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அதுவும் ரத்து செய்யப்படும் என  நினைக்கிறேன் என்றார். அண்ணாமலை ரசிகர்கள் வேகத்தில் அவரை வருங்கால முதலமைச்சர் என்று அழைக்கிறார்கள். அதில் எதுவும் தவறில்லை"  என தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 



 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண